சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி
பாகிஸ்தானின் சீன தயாரிப்பு உயர் ரக போர் விமானத்தால் இந்தியாவின் இரண்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதை அமெரிக்க நிபுணர்கள் இருவர் உறுதி செய்துள்ளனர்.
சீனாவின் J-10
ஏற்கனவே பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் விமானம் ஒன்றை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளதை பிரான்ஸ் உளவுத்துறை உறுதி செய்துள்ள நிலையில், தற்போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இது தொடர்பில் விசாரித்தபோது இந்திய விமானப்படை செய்தித் தொடர்பாளர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர், இந்திய போர் விமானங்களுக்கு எதிராக வான்வழி ஏவுகணைகளை ஏவ சீனாவில் தயாரிக்கப்பட்ட J-10 விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகவும், குறைந்தது இரண்டையாவது வீழ்த்தியதாகவும் கூறினார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், சுட்டு வீழ்த்தப்பட்டதில் குறைந்தது ஒரு இந்திய ஜெட் விமானமாவது பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் போர் விமானம் என்பது உறுதி என்றார்.
மட்டுமின்றி, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-16 போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த இரு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
உறுதி செய்யவில்லை
ஆனால் ரஃபேல் உட்பட போர் விமானங்கள் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதை இந்தியா தரப்பு இதுவரை உறுதி செய்யவில்லை. மாறாக பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத உள்கட்டமைப்பு என்று அடையாளம் காணப்பட்டவற்றி மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியது.
இந்தியாவில் உள்ள உள்ளூர் அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, மூன்று இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளானதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் புதன்கிழமை செய்தி வெளியிட்ட நிலையில், பாகிஸ்தானின் சீனத் தயாரிப்பு போர் விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டதற்கான முதல் மேற்கத்திய உறுதிப்படுத்தலை இது குறிக்கிறது.
சீன தயாரிப்பு J-10 விமானங்களைப் பயன்படுத்தியுள்ளதை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் உறுதி செய்துள்ளார். இதுவரை இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நிறுவனத்தின் ரஃபேல் மற்றும் சீனாவின் J-10 ஆகிய இரண்டும் generation 4.5 போர் விமானங்களாகும். மேலும், இந்தியாவின் ரஃபேல் விமானத்தை வீழ்த்த சீனாவின் PL-15 ஏவுகணையை பாகிஸ்தான் பயன்படுத்தியிருக்கலாம் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |