3,000 கோடி கையூட்டு! 30 ஆண்டுகளாக பெற்றுவந்த சீனர்..மரண தண்டனை விதிப்பு
சீனாவில் 3000 கோடி கையூட்டு பெற்ற முன்னாள் அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ரூ.3000 கோடி கையூட்டு
சீனாவின் நான்ஜிங் நகரில் பணியாற்றிய வந்த அரசு அதிகாரி யாங் யூலின் (69).
இவர் கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அப்போது யூலின் தனது பதவியைப் பயன்படுத்தி நிலப்பரிமாற்றம், பொறியியல் ஒப்பந்தங்கள் மூலம் மோசடி செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.
மரண தண்டனை
அவர் கடந்த 30 ஆண்டுகளில் இந்திய மதிப்பில் ரூ.3000 கோடி (323 மில்லியன் டொலர்கள்) கையூட்டு பெற்றது உறுதிப்படுத்தப்பட்டது.
இது நாட்டிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்டதுடன், சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிக மோசமான குற்றங்களில் ஒன்று என்ற கருத்தும் நிலவியது.
அதனைத் தொடர்ந்து, யாங் யூலினுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |