134 கிலோ உடல் எடை..,திருமணத்திற்கு தயாராக குறைத்த நபர்: பின்னர் நேர்ந்த விபரீதம்
சீனாவில் 36 வயது நபர் ஒருவர் உடல் எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்த சில நாட்களில் உயிரிழந்தார்.
134 கிலோ எடை
ஜின்க்சியாங்கைச் சேர்ந்த லி ஜியாங் என்ற புனைபெயரால் அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவர், 134 கிலோவுக்கு மேல் உடல் எடையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இவர் பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார். 
அவரது பெற்றோரை சந்திக்கும்போது நல்ல தோற்றத்தில் இருக்க வேண்டும் என எண்ணிய லி, தனது உடல் எடையை அறுவை சிகிச்சை மூலம் குறைக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் திகதி லி ஜியாங்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அவர் ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டு, பின் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் அக்டோபர் 4ஆம் திகதி லியின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மீண்டும் ஐ.சி.யுவிற்கு கொண்டு செல்லப்பட்ட லி, சுவாசக்கோளாறு காரணமாக மறுநாள் உயிரிழந்தார்.
அவரது மூத்த சகோதரர் கூறும்போது, லி காதலியின் பெற்றோரை சந்திப்பதற்கு முன்பு உடல் எடையைக் குறைக்க விரும்பினார். அவர் திருமணத்திற்கு தயாராகி வந்தார் என உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |