போருக்கு தயாராகும் சீனா...தைவான் எந்தவொரு சூழ்நிலைக்கும் தயார்
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பெலோசி வருகையை தொடர்ந்து, அதிகரித்துள்ள சீன ஊடுருவலால் தைவான் தனது கடற்படை மற்றும் விமானப் படையின் ராணுவ பயிற்சியை தீவிரப்படுத்தி இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தைவானை சீனா தனது சொந்த பிரேதசமாக அறிவித்து வரும் நிலையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவின் உயர் அதிகாரி பெலோசி தைவானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கு சீனா முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவித்ததுடன் தைவானுக்கு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்து இருந்தது. இந்தநிலையில் செய்வாய் கிழமையான நேற்று அமெரிக்க சபாநாயகர் பெலொசி தைவான் தலைநகர் தைபேவிற்கு வந்தடைந்தார்.
அதன்பிறகு பெலோசி தெரிவித்த கருத்தில், தைவான் அமெரிக்காவின் நம்பகமான பங்காளி என்றும், பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் விநியோகச் சங்கிலிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த தைவானுடன் அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் உலகின் சுதந்திரமான சமூகங்களில் ஒன்றாக தைவானை நாங்கள் பாராட்டுகிறோம் என்று பெலோசி தைவான் நாடாளுமன்றத்தில் கூறினார்.
இந்நிலையில் அமெரிக்க சபாநாயகரின் தைவான் பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததுடன் தனது ராணுவ முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.
சீனாவின் இந்த அதிகரிக்கும் எச்சரிக்கை நடவடிக்கையை தொடர்ந்து, தைவான் தனது கடற்படை மற்றும் விமானப் படை பயிற்சியை அதிகரித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: சிலந்திக்கு பயந்து... பெரும் காட்டுத்தீக்கு காரணமான நபர்: பகீர் சம்பவம்
இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள கருத்தில் சீனா ஐ.நா வீதிகளை மீறியுள்ளதாகவும் அதன் எல்லைக்குள் ஊடுருவும் எந்தவொரு ஊடுருவலையும் எதிர்க்கும் என்றும் கூறியுள்ளது.