2000 ராணி எறும்புகளை கடத்திய சீன நாட்டவர்: சுற்றி வளைத்த விமான நிலைய அதிகாரிகள்
2000 எறும்புகளை கடத்த முயன்ற சீன நாட்டவர் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2000 எறும்புகள் கடத்தல்
கென்யாவில் இருந்து 2000க்கும் மேற்பட்ட தோட்டத்து ராணி எறும்புகளை(Queen Garden Ants) கடத்த முயற்சித்ததை தொடர்ந்து சீன நாட்டவர் ஒருவர் மீது வனவிலங்கு கடத்தல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கென்ய கூட்டாளி ஒருவருடன் இணைந்து சீன நாட்டவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
எறும்புகளை நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீன நாட்டவர் கடத்த முயன்ற போது அந்த முயற்சியானது முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஜாங் கெகுன் மற்றும் சார்லஸ் முவாங்கி இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை நைரோபி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இருவர் மீதும் வனவிலங்கு கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனை ஆகிய குற்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடத்தப்பட இருந்த எறும்புகள் தனித்தனி சோதனைக் குழாய்களில் அடைக்கப்பட்டு அல்லது டிஷ்யூ பேப்பர்களில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
கடத்தலில் ஈடுபட்ட ஜாங் இந்த எறும்புகளை சீனாவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |