டிரம்ப் விமானம் முன் அசையாமல் நின்ற சீன அதிகாரி.., வைரல் வீடியோ
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மூன்று நாள் பயணமாக நேற்று சீனா சென்றார்.
அமெரிக்கா ஜனாதிபதி ஒருவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.
பெய்ஜிங் விமான நிலையத்தில் டிரம்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜின் பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் வர்த்தக ஒப்பந்தங்கள், ஈரானுடனான போர் பதற்றம் மற்றும் தைவான் விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், சீனாவில் டிரம்ப் வருகையின்போது, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் அருகில் சென்றபோதும், அசைவற்று நின்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட சீன அதிகாரியின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Is he a robot? 🤖
— Military Observer (@TheMilObserverr) May 13, 2026
A Chinese officer is going viral after standing perfectly still as Air Force One thundered just meters overhead with absolutely no visible reaction.
The internet has questions. pic.twitter.com/hXBDZy5SaD
பெய்ஜிங்கில் டிரம்ப் தரையிறங்கியபோது, சீன அதிகாரியின் இந்த தீவிர ஒழுக்கமும், சிலையைப் போன்ற நிலையும் உலகெங்கிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |