வெளிநாட்டின் அரசின் ரகசியங்களை கசிய விட்ட சீன அதிகாரி: மரண தண்டனை நிறைவேற்றம்
Chinese Official punished to Death Over Espionage: வெளிநாட்டிற்கு ரகசியங்களை கசிய விட்ட சீன அதிகாரிகளுக்கு மரண தண்டனையானது விதிக்கப்பட்டுள்ளது.
சீன அதிகாரிக்கு மரண தண்டனை
திங்கட்கிழமை பாவ்மிகுவான்(Baomiguan) என்ற சீனாவின் தேசிய அரசாங்க ரகசியப் பாதுகாப்பு நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத அறிக்கையில், அரசின் ரகசிய தகவல்களை வெளிநாட்டு சக்திகளுக்கு வழங்கிய சீன அரசு அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிர்வாக கட்டமைப்பில் பணியாற்றி வந்த அந்த அதிகாரி, மா(Maa) என்ற அவரது குடும்ப பெயரால் மட்டுமே அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

அதே போல பெயர் குறிப்பிடாத நீதிமன்றம் அரசு அதிகாரியான மா-வின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டு இருப்பதுடன் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தண்டனை அறிவிக்கப்பட்ட நேரம், இடம் மற்றும் மரண தண்டனை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டதா என்பது குறித்து விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அறிக்கை வழங்கியுள்ள தகவல்படி, வெளிநாட்டில் மா பணியாற்றி கொண்டிருந்த போது கைலின் என்ற பெண் ஒருவரிடம் பழகியுள்ளார்.
அவர் சீன மொழி கற்றுக் கொள்வது போல் பழகி மா-வுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி அடிக்கடி சந்திப்புகளை நிகழ்த்தியுள்ளார்.
மா தாயகம் திரும்பிய பிறகும், கைலின் அறிவுறுத்தல் பேரில் மா நீண்டகால உளவு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.