மலேசிய வானில் ஒளிர்ந்த சீன ராக்கெட் குப்பை: மிரளவைக்கும் வீடியோ காட்சிகள்!
சீன ராக்கெட் லாங் மார்ச் 5பி-யின் குப்பைகள் மலேசியாவின் இரவு நேர வானத்தை ஒளிரச் செய்தது தொடர்பான வீடியோக்கள் அந்த நாட்டின் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
சீனாவின் லாங் மார்ச் 5பி ராக்கெட் வளிமண்டலத்தில் இருந்து வெளியேறி பூமியின் ஈர்ப்பு விசைகளுள் நுழைந்ததை தொடர்ந்து, ராக்கெட்டின் பாகங்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்தாக அமெரிக்க விண்வெளிக் நிறுவனம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து சீன விண்வெளி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ராக்கெட் பாகங்கள் வான்பாதையில் நுழைந்த உடனே அதன் பாகங்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது.
Debris from Chinese rocket lit up night sky some parts of Malaysia. US space command confirm the development China's Long March 5B (CZ-5B) re-entered over the Indian Ocean at approx 10:45 am MDT on 7/30.pic.twitter.com/BIkjamFbTz
— Sidhant Sibal (@sidhant) July 30, 2022
மேலும் அவற்றின் பாதிப்புகள் போர்னியோ தீவுக்கு அருகில் உள்ள சுலு கடலில் நிகழ்ந்தாகவும், சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது இந்தநிலையில் மலேசியாவின் இரவு நேர வானத்தை ஒளிரச் செய்த சீனாவின் லாங் மார்ச் 5பி-யின் குப்பைகள் தொடர்பான வீடியோக்கள் அந்த நாட்டின் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
கூடுதல் செய்திகளுக்கு: சச்சின் சார் என்று அழைக்க வேண்டும்...அவுஸ்திரேலிய இளம் வீரர் மீது இந்திய ரசிகர்கள் ஆதங்கம்
இந்த வீடியோவில் ராக்கெட் குப்பைகள் தெளிவாக தெரிவதால் மக்கள் ஆச்சரியத்தில் முழ்கியுள்ளனர்.
2030ஆம் ஆண்டுக்குள் நிலவில் ஒரு தளத்தை அமைத்து மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது குறிப்பிடதக்கது.