சச்சின் சார் என்று அழைக்க வேண்டும்...அவுஸ்திரேலிய இளம் வீரர் மீது இந்திய ரசிகர்கள் ஆதங்கம்
இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை மரியாதையின்றி சச்சின் என்று அழைப்பதா, சச்சின் சார் என்றல்லவா அழைக்க வேண்டும் என அவுஸ்திரேலிய இளம் வீரர் மார்னஸ் லாபுஷாக்னே எதிராக இந்திய ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்றிலேயே முதல்முறையாக மகளிர் கிரிக்கெட் போட்டி இந்த வருடம் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பலரும் பாராட்டுகள் மற்றும் வரவேற்புகள் தெரிவித்து வரும் நிலையில், கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
அதில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது, இது எங்களின் அழகான விளையாட்டை புதிய ரசிகர்களுக்கு அழைத்து செல்லும் என்று நம்புகிறேன், மேலும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்திருந்தார்.
இந்தநிலையில் சச்சினின் ட்வீட்டுக்கு பதிலளித்த அவுஸ்திரேலிய இளம் வீரர் மார்னஸ் லாபுஷாக்னே, உங்களின் கூற்றை முழுவதுமாக ஏற்கிறேன் சச்சின், அத்துடன் அவுஸ்திரேலிய அணியும் இந்திய அணியும் மோதும் போட்டி மிகவும் அற்புதமாக இருக்கும் என தெரிவித்து இருந்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: மில்லியன் ரூபிள் ஊதியம்...போருக்கு தயாராகும் 30,000 ரஷ்ய தன்னார்வலர்கள்
மார்னஸ் லாபுஷாக்னேவின் இந்த கருத்து இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை வெறுமனே சச்சின் என்று அழைப்பதா “சச்சின் சார்” என்று அல்லவா அழைக்க வேண்டும் எனப் பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் ஆதங்கத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.