மில்லியன் ரூபிள் ஊதியம்...போருக்கு தயாராகும் 30,000 ரஷ்ய தன்னார்வலர்கள்
உக்ரைனில் நடைபெற்று வரும் போர் தாக்குதலில் ஈடுபடுவதற்காக ரஷ்யாவில் இருந்து 30,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை ரஷ்ய ராணுவம் திரட்டி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் தாக்குதலில், இருநாட்டு ராணுவ வீரர்கள், பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு சாலைகளில் இறந்து கிடந்தனர்.
இந்த போர் தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கிவ்வை ரஷ்ய படைகள் கைப்பற்ற தவறியதை அடுத்து தற்போது ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான டான்பாஸை முழுவதுமாக சுகந்திர பகுதியாக மாற்றும் முயற்சியில் ரஷ்ய ராணுவ படைகள் ஈடுபட்டு வருகிறது.
Across Russia, "volunteer" units are being formed to be sent to Ukraine. In total, up to 30,000 people may be involved in combat actions.
— NEXTA (@nexta_tv) July 30, 2022
Recruitment is carried out in poor regions. People are offered to go to war, promising to earn up to a million rubles over the summer.
?CNN pic.twitter.com/XpoaoPjbys
இருப்பினும் உக்ரைனிய படைகளின் எதிர் தாக்குதலால் டான்பாஸை முழுவதுமாக கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் அங்குலம் அங்குலமாகவே முன்னேறி வருகின்றனர். மேலும் உக்ரைனிய ராணுவ படை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இதுவரை ரஷ்ய படைகள் சுமார் 40000 வீரர்களை இழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் உக்ரைனில் நடைபெற்று வரும் போர் தாக்குதலில் ஈடுபடுவதற்காக ரஷ்யாவின் மிகவும் ஏழ்மையான பகுதியில் இருந்து சுமார் 30,000 தன்னார்வலர்களை ரஷ்ய ராணுவம் திரட்டி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் தேடும் அதிபயங்கர போர் குற்றவாளி: வெளிவந்த புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள்!
இவ்வாறு போர் தாக்குதலில் ஈடுபட முன்வரும் தன்னார்வலர்களுக்கு 1 மில்லியன் ரூபிள் வரை ஊதியம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.