நேபாள வான்பரப்பில் எரிந்து விழுந்த சீன ரொக்கெட்
உளவு செயற்கைக்கோள்களை அனுப்பும் சீன ரொக்கெட் ஒன்று நேபாள வான்பரப்பில் எரிந்து விழுந்தது.
உளவு செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பப் பயன்படுத்தப்பட்ட சீன ரொக்கெட் சனிக்கிழமையன்று நேபாளத்தின் வானத்தில் எரிந்தது என்று அமெரிக்க கடற்படை நிறுவனம் (USNI) தெரிவித்துள்ளது. இதேபோன்ற சம்பவம் கடந்த வாரம் டெக்சாஸில் நடந்தது.
சாங் ஜெங் 2டி 'லாங் மார்ச்' ரொக்கெட் 200 நாட்களுக்கும் மேலாக விண்வெளியிலிருந்து சனிக்கிழமை மீண்டும் வளிமண்டலத்தில் நுழைந்து நேபாளத்தின் வானத்தில் எரிந்தது என்று வானியல் இயற்பியலாளர் ஜொனாதன் மெக்டோவல் (Jonathan McDowell) தெரிவித்துள்ளார்.
Getty Images
நான்கு டன் எடைகொண்ட இந்த விண்வெளி குப்பை, சீன தேசிய விண்வெளி நிர்வாகத்தின் Y-65 பணியின் ஒரு பகுதியாகும். ஜூலை 29 அன்று, மத்திய சீனாவில் உள்ள Xichang செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து மூன்று இராணுவ மின்னணு கண்காணிப்பு செயற்கைக்கோள்களை அது விண்ணில் செலுத்தியது.
சீனர்கள் இந்த திட்டத்தை லான்ச் செய்யப்பட்டபோது, அந்த ரொக்கெட் இந்த ஆண்டு எப்போதாவது எதிர்பாராத நேரத்தில் உலகில் எங்கோ ஓரிடத்தில் சீரற்ற முறையில் மீண்டும் நுழையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதேபோல், இதே ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட மற்றோரு ரொக்கெட், தென் சீனக் கடலைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட மூன்று உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய பின்னர் மார்ச் 8 அன்று டெக்சாஸில் எரிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.