லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள்
லண்டனில் அமைந்துள்ள பண்டைய பிரித்தானிய பாரம்பரிய தளம் ஒன்றை பார்வையிடுபவர்களின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்க சீன அரசு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் தூதரகம்
லண்டனில் சிஸ்டெர்சியன் அபே, செயிண்ட் மேரி கிரேசஸின் இடிபாடுகளைப் பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு சீன அதிகாரிகள் விமான நிலைய பாணி கடுமையான பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ள உள்ளனர்.

தொடர்புடைய பாரம்பரிய தளமானது சீனாவின் சூப்பர் தூதரகம் அமையவிருக்கும் இடத்திற்குள் இருப்பதால், வெளிவிவகாரம் மற்றும் உள்விவகார அலுவலக அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் சூப்பர் தூதரகம் திட்டத்தை அங்கீகரிப்பதற்காக சர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவுடன் ஒரு ரகசிய ஒப்பந்தத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளால் தற்போது இந்த திட்டம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
1350 ஆம் ஆண்டு மன்னர் மூன்றாம் எட்வர்ட் அவர்களால் நிறுவப்பட்ட அந்த சின்னங்கள் தற்போது சீனாவிற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.

ஜனாதிபதி ஜி ஜின்பிங்
சட்டத்திற்கு உட்பட்டு பேசுவதென்றால், சீன ஆட்சியை விமர்சிப்பவர்கள் இனி அங்கு செல்வது பாதுகாப்பற்றதாக இருக்கும் என்றே சீனா தொடர்பான நாடாளுமன்றங்களுக்கு இடையிலான கூட்டணியின் நிர்வாக இயக்குநரான Luke de Pulford தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்டார்மர் வெற்றி பெற்ற பிறகு, லண்டனில் சூப்பர் தூதரகம் தொடர்பான திட்டமிடல் சீனாவால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

மட்டுமின்றி, ஜனவரி மாதம் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்க சீனாவுக்கு விஜயம் செய்தபோது, சேன்ஸலர் ரேச்சல் ரீவ்ஸிடம் ஜனாதிபதி ஜி ஜின்பிங் இதை நேரடியாகக் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |