'வங்கி மண்' வாங்கினால் பணம் சேருவதாக நம்பிக்கை - வாங்கி குவிக்கும் மக்கள்

China
By Karthikraja Mar 08, 2025 01:22 PM GMT
Report

 வங்கியின் வெளியே சேகரிக்கப்படும் மண்ணை வாங்கினால் செல்வம் சேரும் எனக்கூறி இணையத்தில் மண் விற்பனை அதிகரித்துள்ளது.

வங்கி மண்

சீனாவில் உள்ள வங்கிகளின் வாசலில் உள்ள மண்ணை வீட்டில் வைத்துக்கொண்டால் வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகி, செல்வம் சேரும் என்ற நம்பிக்கை பரவி வருகிறது.

இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து இணையத்தில் பலரும் 'வங்கி மண்' என்ற பெயரில் மண் விற்பனையை தொடங்கியுள்ளனர்.

பாக்கெட் மண் ரூ.10,000

இதற்காக வங்கியின் வாசலில் உள்ள மண், வங்கியின் பூந்தொட்டிகளில் உள்ள மண், பணம் எண்ணும் இயந்திரங்களிலிருந்து வரும் தூசியை கூட சேகரிக்கின்றனர்.

இந்த வங்கி மண்ணை, சிறிய பாக்கெட்டில் அடைத்து, 888 யுவான்(இந்திய மதிப்பில் ரூ.10,000) வரை விற்பனை செய்கிறார்கள். 

china bank soil sand sale

விற்பனையாளர் ஒருவர், Bank of China, Industrial and Commercial Bank of China, Agricultural Bank of China, China Construction Bank, மற்றும் Bank of Communications என சீனாவின் 5 முக்கிய வங்கிகளில் இருந்து மண்ணை சேகரித்து விற்பதாக தெரிவித்துள்ளார்கள். 

china bank soil sand sale

இது குறித்து பேசிய விற்பனை பிரதிநிதி ஒருவர், இந்த மண் இரவில் எடுக்கப்பட்டது. இது உங்களை சூழ்ந்துள்ள கெட்ட சக்தியை அழித்து, செல்வதை சேர்க்கும். ஆனால் இதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

99.99சதவீத வெற்றி விகிதம்

சில விற்பனையாளர்கள் இந்த மண் 99.99 சதவீதம் வெற்றி விகிதத்தை கொண்டுள்ளதாக விளம்பரப்படுத்துகின்றனர். நம்பகத்தன்மையை அதிகரிக்க சிலர் வங்கியின் வாசலில், மண் சேகரிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

வாடிக்கையாளர் ஒருவர் தொழில் வளர்ச்சிக்கு இந்த மண் உதவும் என நம்பி வாங்கியுள்ளதாகவும், தன்னை போல் எனது நண்பர்கள் பலரும் இந்த மண்ணை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

china bank soil sand sale

சீனாவின், நகர்ப்புற நிலஅமைப்பு விதிப்படி, பொது இடங்களில் இருந்து மண்ணை தோண்டுவது உட்பட பசுமையான இடங்களை அழிப்பதை தடை செய்துள்ளது.

"இது போன்று மண் அதிர்ஷ்டத்தை தரும் என விற்பனை செய்வது மோசடியாக கருதலாம். வாடிக்கையாளர் பணத்தை திரும்ப கோர உரிமையுள்ளது" என ஜெஜின் சட்ட நிறுவன வழக்கறிஞர் ஃபூ ஜியான் தெரிவித்துள்ளார். 

60,000 ஆண்​டு​களுக்கு ​மின்​சா​ரம் வழங்கக்கூடிய வரம்பற்ற எரிசக்தி மூலத்தை கண்டுபிடித்த சீனா

60,000 ஆண்​டு​களுக்கு ​மின்​சா​ரம் வழங்கக்கூடிய வரம்பற்ற எரிசக்தி மூலத்தை கண்டுபிடித்த சீனா

"நான் வங்கியில் உள்ள தொட்டியில் பூக்களை வளர்க்க என வீட்டில் இருந்துதான் மண்ணை கொண்டு வருவேன்", "நான் வங்கியின் அருகே தான் வசிக்கிறேன் என் செல்வம் ஏன் அதிகரிக்கவில்லை" என வங்கி ஊழியர் இந்த விற்பனையை விமர்சித்து வருகிறார்கள்.       

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US