சீன உளவு பலூன்: அமெரிக்காவை உளவு பார்க்க அமெரிக்க தொழில்நுட்பத்தையே பயன்படுத்தியது அம்பலம்!
அமெரிக்காவை உளவு பார்க்க சீனா அமெரிக்காவின் சொந்த தொழில்நுட்பத்தையே பயன்படுத்தியது தெரியவந்தது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா மீது பறந்த சீன உளவு பலூன் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியானதையடுத்து, அமெரிக்காவின் தொழில்நுட்பத்தையே உளவு பார்க்க சீனா பயன்படுத்தியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தகவல் வெளியிட்டது.
பல்வேறு அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளின்படி, வணிக ரீதியாக கிடைக்கும் அமெரிக்க கியர், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சிறப்பு சீன சென்சார்கள் தகவல்களை சேகரிக்க பயன்படுத்தப்பட்டன.
US AIR FORCE/DEPARTMENT OF DEFENCE/REUTERS
வானிலையை கண்காணிக்கவே பலூன் அனுப்பப்பட்டதாக சீனா விளக்கம் அளித்தாலும், உளவு பார்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கு தற்போது வெளியாகி வரும் தகவல்களே சான்றாக நிற்கிறது.
இந்த பலூன் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்தாலும், சீனாவுக்கு முக்கிய தகவல்களை அனுப்ப முடியாமல் போனதை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
Ryan Seelbach/U.S. Navy/via AP
இந்த ஆண்டு ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை சீன சாம்பல் பலூன் அமெரிக்க வானில் பறந்தது. அதிபர் ஜோ பைடனின் உத்தரவின் பேரில் அமெரிக்கா அட்லாண்டிக் பெருங்கடலின் மேல் பலூனை போர் விமானத்தின் மூலம் ஏவுகணை வீசி அழித்தது.
பின்னர், அந்த பலூனின் குப்பைகளை சேகரித்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த புதிய தகவல்களுக்கு வெள்ளை மாளிகையும், மத்திய புலனாய்வு அமைப்பும் பதில் அளிக்கவில்லை.
சீன உளவு பலூனில் முக்கியமான தகவல்களை கசியவிடக்கூடிய தொழில்நுட்பம் இருந்ததாக அமெரிக்கா முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Chinese Spy Balloon, American Technology, US Technology
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |