சீன உளவாளியுடன் நெருக்கம்... பிரித்தானிய இளவரசர் தொடர்பில் வெளிவரும் பகீர் தகவல்
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் மிக நெருக்கமான நண்பர் சீன உளவாளி என்பதுடன், அரச குடும்பத்து உறுப்பினர்களை மிக எளிதாக அணுகக் கூடியவராகவும் இருந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விண்ட்சர் மாளிகையில்
இளவரசர் ஆண்ட்ரூவின் ஆலோசகர்களில் ஒருவரான Dominic Hampshire என்பவரின் கடிதமே, தற்போது இந்த சம்பவத்தை அம்பலப்படுத்தியுள்ளது. 2020ல் சீன உளவாளியின் அலைபேசியில் MI5 மூலம் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் ஹாம்ப்ஷயர் ஆண்ட்ரூவுக்காக தொடர்ந்து பணியாற்றினார்.
விண்ட்சர் மாளிகையில் சர்வசாதாரணமாக அந்த சீன உளவாளி புழங்கியுள்ளார். மேலும், சீன முதலீட்டாளர்களுடன் இளவரசர் ஆண்ட்ரூவுக்காக அந்த நபர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு இழப்பீட்டு தொகை வழங்கியதன் பின்னர், அரச குடும்பத்து பணிகளில் இருந்து ஆண்ட்ரூ விலகியதன் 10 மாதங்களுக்கு பிறகு அந்த குறிப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு
மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் இளவரசர் ஆண்ட்ரூவிடம் Dominic Hampshire பணியாற்றியுள்ளார். மட்டுமின்றி, தனது சீன தொடர்புகள் தேசிய பாதுகாப்பு விடயமாக மாறக்கூடும் என்பதை ஆண்ட்ரூ பல ஆண்டுகளாக அறிந்திருக்க வேண்டும் என்றே நம்பப்படுகிறது.
50 வயதான அந்த சீன தொழிலதிபர், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக பிரித்தானியாவில் இருந்து அவரை தடை செய்யும் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டில் தோல்வியடைந்தார்.
தற்போது வெளியான தகவலில், சீன உளவாளி தொடர்பில் அச்சம் எழுந்த பிறகு ஆண்ட்ரூ தமது அனைத்து தொடர்புகளையும் துண்டித்ததாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |