30 வயதில் பில்லியனரான தேயிலை நிறுவன சி.இ.ஓ
சீன தேயிலை நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி 30 வயதில் பில்லியனர் ஆகியுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த 30 வயது தொழிலதிபர் ஜுஞ்ஜி ஜாங் (Junjie Zhang), அமெரிக்க IPO-வில் தனது தேநீர் கடை சங்கிலி நிறுவனமான Chagee Holdings Ltd.-ஐ பட்டியலிட்டு பில்லியனராக உயர்ந்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையேயான வர்த்தக உள்நோக்கங்கள் கடுமையாக உள்ள நிலையில், இந்த வெற்றி குறிப்பிடத்தக்கதாகும்.
Chagee நிறுவனம், Nasdaq பங்குசந்தையில் பட்டியலாகி 411 மில்லியன் டொலரை முதலீடாக பெற்றுள்ளது.
இதன் மூலம் ஜாங், தனது நிறுவன பங்குகளின் அடிப்படையில் 1.8 பில்லியன் டொலர் செல்வம் கொண்டவராக இப்போது மதிப்பீடு செய்யப்பட்டுள்ளார்.
2017-ல் யுன்னான் மாகாணத்தில் தொடங்கப்பட்ட Chagee நிறுவனம், பாரம்பரிய சீன தேநீர் வகைகளை நவீன பாணியில் வழங்குகிறது. இது கலோரி குறைவான, ஆரோக்கிய தேநீர் கலவைகளை விரும்பும் நுகர்வோர்களிடையே பிரபலமாகியுள்ளது.
Starbucks போல அழகான, லவஞ்ச் தோற்றத்தில் அமைக்கப்பட்ட கடைகள், சுமார் 2 டொலருக்கு ஒரு பானம் என்ற விலையில் இளைய தலைமுறையை கவர்ந்துள்ளன.
Chagee நிறுவனம் உலகளவில் தற்போது 6,440 கடைகளைக் கொண்டுள்ளது, அதில் பெரும்பாலானவை சீனாவில் உள்ளன. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் அதனது கிளைகள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |