உடைக்காக உடலை மெலியவைக்க இளம்பெண் எடுத்த விபரீத முயற்சி
தனது பிறந்தநாளுக்கு வாங்கிய உடை அளவு சிறியதாக இருந்ததால், உடலை மெலியவைக்க விபரீத முயற்சி ஒன்றை எடுத்த இளம்பெண் ஒருவர், கிட்டத்தட்ட செத்துப் பிழைத்துள்ளார்.
உடைக்காக உடலை மெலியவைக்க விபரீத முயற்சி
சீனாவைச் சேர்ந்த Mei (16) என்னும் பெண், திடீரென நிற்கமுடியாமல் கால்கள் வலுவிழந்து, மூச்சு விடமுடியாத நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரைக் காப்பாற்ற அவசர சிகிச்சைப்பிரிவு மருத்துவர்கள் 12 மணி நேரம் போராட வேண்டியிருந்தது. விடயம் என்னவென்றால், Mei தனது பிறந்தநாளுக்காக வாங்கிய உடை அளவு சிறியதாக இருந்ததால், அது தனக்கு பொருந்தும் வகையில் உடலை மெலியவைக்க திட்டமிட்டுள்ளார்.
Unsplash
அதற்காக, இரண்டு வாரங்களாக வெறும் காய்கறிகளை உணவாக உண்டு, அதிலும் உடல் எடை கூடிவிடக்கூடாது என்பதற்காக மலமிளக்கி மருந்துகளையும் எடுத்துவந்துள்ளார் Mei.
அதனால் அவரது உடலிலுள்ள பொட்டாஷியத்தின் அளவு மிகவும் குறைந்து, hypokalaemia என்னும் பயங்கர பிரச்சினை ஏற்பட்டுள்ளது Meiக்கு.
இந்த hypokalaemia என்னும் பிரச்சினை, சுவாசம் மற்றும் இதயத்தை திடீரென நிறுத்திவிடக்கூடும். அதாவது, மரணம் வரை ஏற்படக்கூடும்.
தற்போது முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்ட Mei, தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், இனி உடல் மெலிவதற்காக இப்படிப்பட்ட விபரீத முயற்சிகளில் இறங்கமாட்டேன் என்று உறுதியும் அளித்துள்ளார்.