மணமகளை கம்பத்தில் கட்டி வைப்பது சடங்கா? சர்ச்சை ஏற்படுத்திய சீன திருமண வழக்கம்!
சீனாவில் ஆண்கள் குழு ஒன்று திருமணம் நடைபெற இருக்கும் மணப்பெண்ணை கம்பத்தில் கட்டி வைக்கும் வித்தியாசமான திருமண சடங்கு ஆன்லைனில் வெளியானதை தொடர்ந்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சர்ச்சையான திருமண சடங்கு
சீனாவில் நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் ஒரு திருமண வழக்கம் ஆன்லைனில் வெளியான ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவைத் தொடர்ந்து சர்ச்சையை மாறியுள்ளது.
அதில் திருமண சடங்கு நடைபெறும்போது மணப்பெண்ணை ஒரு ஆண்கள் குழு துருத்திக் கொண்டிருப்பதை அந்த காட்சிகள் காட்டுகின்றன. Shanxi மாகாணத்தில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்த சம்பவம் சீன சமூக ஊடகம் Weibo-வில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
அதில் அந்த மணப்பெண் கூச்சலிட்டு தவி கேட்கும் போது ஆண்கள் அவளை தொடர்ந்து கம்பத்தில் கட்டுவதை வீடியோ காட்டுகிறது.
இந்த செயலில் ஈடுபட்ட ஆண்கள், குறிப்பிட்ட செயலை "ஹூன் நாவோ”("hun nao”) அல்லது திருமண தாக்குதல்(wedding hazing) என்று அழைக்கப்படும் உள்ளூர் வழக்கத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறியுள்ளனர்.
அவர்கள், மணமகள் மற்றும் மணமகன் இந்த சடங்கில் பங்கேற்க ஒப்புக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
பார்வையாளர்கள் கவலை
இருப்பினும், அப்போது மணமகளுக்கு ஏற்பட்ட துன்பமும், சுற்றி உள்ளவர்களின் செயல்களில் உள்ள வன்மையான தன்மையும், மரபின் பொருத்தமுடைய தன்மை குறித்து தீவிரமான கவலைகளை எழுப்பியுள்ளன.
சிலர் இந்த நடைமுறையை ஒரு தீங்கற்ற வழியாக நகைச்சுவை நிறைந்த சூழ்நிலையை உருவாக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.
பலர் சுற்றியுள்ளவர்களின் செயல் மணமகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்று வாதிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |