பல பெண்களுடன் ரகசிய உறவில் கணவர்: ஒன்லைன் ஜோதிடரை நம்பிய மனைவியால் வந்த வினை
சீனாவில் ஒன்லைன் ஜோதிடரின் பேச்சைக் கேட்டு, பெண்ணொருவர் தனது கணவரை சந்தேகப்பட்டது காவல்துறையின் தலையீட்டை தூண்டியது.
ஒன்லைன் ஜோதிடர்
கிழக்கு சீனாவில் உள்ள Wuhuவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவர் குறித்து ஒன்லைன் ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். 
அப்போது அவரது கணவர் தவறான பெண்களை அணுகுவதாகவும், பிற பெண்களுடன் ரகசிய உறவில் இருப்பதாகவும் அதன் மூலம் அறிந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக்காக குறித்த பெண் 500 யுவான் கட்டணம் செலுத்தியிருக்கிறார். ஆனால் ஒன்லைன் ஜோதிடர் எந்த ஆதாரத்தையும் அவரது கூற்றுக்கு வெளிப்படுத்தவில்லை.
இருந்தாலும், பணம் செலுத்திவிட்டதால் அந்த கூற்றுகளை உண்மை என நம்பிய அப்பெண், தனது கணவர் ஏமாற்றியதாக குற்றம்சாட்டி பொலிஸை நாடியுள்ளார்.
சகிக்க முடியாததாக
குறித்த பெண்ணின் கணவரோ, நியாயமற்ற முறையில் தன் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதால், ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தனது திருமண வாழ்க்கை சகிக்க முடியாததாக மாறிவிட்டதாகவும் கூறி காவல்துறையினரிடம் உதவி கேட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தம்பதியை அழைத்து பேசிய பொலிஸார், மூடநம்பிக்கையை விடுத்து உண்மைகளை நம்ப வேண்டும் என அப்பெண்ணுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், இருவருக்கும் ஆலோசனைகளை வழங்கி சமரசம் செய்ததாக கூறப்படுகிறது. அன்ஹுய் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் செய்தி வெளியிட்டபோது, இந்த அசாதாரண நிகழ்வு பொதுமக்களின் கவனத்திற்கு வந்தது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |