வேலையை ராஜினாமா செய்த சீன இளைஞர்: விருந்து வைத்து தடபுடலாக கொண்டாடிய நண்பர்கள்
சீனாவில் இளைஞர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்ததற்காக அவரது நண்பர்களுடன் இணைந்து விருந்து, இசை ஆகியவற்றுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
வேலையில் இருந்து ராஜினாமா
உலகில் தற்போது இருக்கும் பணி சூழலில் பல்வேறு நபர்கள் நிறுவனங்களின் கீழ் ரோபோக்களை போல் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்த வேலையை விட்டால் அடுத்து என்ன செய்வது, வேறு வேலை கிடைக்குமா என்பது போன்ற பல பதற்றங்களால் பெரும்பாலானோர் பணி அழுத்தங்களையும் தாண்டி அதே வேலையில் நீடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது.
ஆனால் அதிலும் சிலர் துணிச்சலாக அந்த வேலையை துறந்து விட்டு தங்களுக்கான புதிய வாழ்க்கையை அமைக்க முயற்சிகளை மேற்கொள்ள தான் செய்கிறார்கள்.
அப்படி, சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தை சேர்ந்த 27 வயதுடைய லியாங் என்ற இளைஞர் தான் பணியாற்றி வந்த பேங்க் வேலையில் இருந்து மே மாதம் வெளியேறியுள்ளார்.
இந்த நிகழ்வை திருமணத்தைப் போல் கொண்டாடும் விதமாக நண்பர்கள் பலரை அழைத்து மேசை முழுவதும் உணவுகளை அடுக்கி விருந்து வைத்து துள்ளிசையில் ஆட்டம் போட்டு விமர்சையாக லியாங் என்ற இளைஞர் கொண்டாடியுள்ளார்.
மேலும் லியாங் விலக வேலையில் அவருக்கு முன்னதாக விலகிய சில நண்பர்கள் அவர்களுக்கு We’re done with this bullsh*t job!” என்ற வாசகம் கொண்ட பேட்சை மார்பில் அணிவித்தனர்.
புதிய வாழ்க்கை
இது தொடர்பாக லியாங் தெரிவித்த கருத்தில், திரும்ப திரும்ப ஒரே வேலையை செய்யக்கூடிய அந்த வேலையில் இருந்து மே மாதம் வெளியேறினேன்.
இது போன்ற வேலைகள் நமது உற்சாகம் மற்றும் புதிய யோசனைகளை நம்மிடம் இருந்து முற்றிலுமாக அழித்து விடும்.
நான் தற்போது கன்டென்ட் கிரியேட்டராகவும், காஃபி கடை ஒன்றையும் நடத்தி வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம் நிலவி வரும் நிலையில், லியாங் வேலையைத் துறந்தது மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |