பிரசவ வலியை அனுபவிக்க காதலன் செய்த விபரீதம்! ரத்தான திருமணம்..காதலி மீது வழக்கு
சீனாவில் காதலியின் குடும்பத்தார் கூறியதற்காக பிரசவ வலியை அனுபவித்த இளைஞருக்கு சிறுகுடலின் பகுதி நீக்கப்பட்டது.
விபரீத பயிற்சி
சீனாவைச் சேர்ந்த இளைஞர் பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலை அறிந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் விபரீத பயிற்சி ஒன்றை குறித்த இளைஞருக்கு கொடுத்துள்ளனர்.
அதாவது, செயற்கையான முறையில் பிரசவ வலியை அனுபவிக்குமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு பெண்கள் அனுபவிக்கும் வலிகளை உணர்த்துவதற்காக அவர்கள் இவ்வாறு செய்ததாக கூறப்பட்டது.
காதலி மீது வழக்கு
அதனை ஏற்ற இளைஞர் வலியை தாங்க முடியாமல் அழுதுள்ளார். அதுமட்டுமில்லாமல் உடல்நிலை மோசமானதால், சிறுகுடலின் ஒரு பகுதியை நீக்கியுள்ளார்.
இதன் காரணமாக காதலர்களின் திருமணம் ரத்தானது. மேலும் குறித்த இளைஞர் காதலி மீது வழக்கும் தொடர உள்ளார் என தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |