76 ஆண்டுகளுக்கு பிறகு.. ஒரே இன்னிங்ஸில் 400 ஓட்டங்கள் குவித்த சின்மய் சுதர்
chinmay sutar become 2nd player cross 400 runs at ranji trophy: ரஞ்சி கிண்ணத் தொடரரில் மிசோரம் அணிக்காக ஆடிய சின்மய் சுதர், ஆட்டமிழக்காமல் 400 ஓட்டங்களை குவித்து ரஞ்சி கிண்ணத்தில் 400 ஓட்டங்கள் குவித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
400 ஓட்டங்கள் குவித்த சின்மய் சுதர்
2026 - 2027 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கிண்ணத் தொடர், கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று தொடங்கிய நாகலாந்து மற்றும் மிசோரம் அணிகளுக்கு இடையேயான போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற நாகலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய மிசோரம் அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 581 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
மிசோரம் வீரர் சின்மய் சுதர், ஆட்டமிழக்காமல் 400 ஓட்டங்களை விளாசி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
517 பந்துகளில், 46 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட 400 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதன் மூலம், ரஞ்சி கிண்ண வரலாற்றில் 400 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை சின்மய் சுதர் பெற்றுள்ளார்.
முன்னதாக, 1948 ஆம் ஆண்டு மகாராஷ்டிர அணியின் பி.பி. நிம்பால்கர், கத்தியவாருக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 443 ஓட்டங்கள் குவித்ததே ரஞ்சி கிண்ணத்தின் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களாக உள்ளது.
76 ஆண்டுகளுக்கு பிறகு, சின்மய் சுதர் ரஞ்சி கிண்ணத்தில் 400 ஓட்டங்களை கடந்துள்ளார்.
29 வயதான சின்மய் சுதருக்கு இது 2வது ரஞ்சி போட்டி ஆகும்.
அதைத்தொடர்ந்து. முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய நாகலாந்து அணி, 1 விக்கெட் இழப்பிற்கு 50 ஓட்டங்கள் குவித்து ஆடி வருகிறது.