நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! உங்கள் தோற்றத்தை.. பெரும்புள்ளி சித்ரா ராமகிருஷ்ணா விவகாரத்தில் சிக்கும் தமிழ் சாமியார்?
நிதி மோசடி உள்ளிட்ட ஏராளமான புகார்களில் சிக்கி தலைமறைவாக இருக்கும் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் சி.இ.ஓ சித்ரா ராமகிருஷ்ணன் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
2013 முதல் 2016 ஆம் ஆண்டுவரை தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் செயல் அதிகாரியாகவும், அதன் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார். பின்னர் அவர் தனிப்பட்ட காரணங்களால் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி பணியிலிருந்து விலகினார்.
அவருக்கும் வெளி உலகம் அறியாத மர்ம இமயமலை சாமியாருக்குமான மின்னஞ்சல் தொடர்புகள் குறித்து ஊடகங்கள் ஏராளமான சந்தேக கேள்விகளை எழுப்பி வருகின்றன.
இமயமலை சாமியார் தொடர்பாக செபியிடம் சித்ரா ராமகிருஷ்ணன் தெரிவித்தவற்றும் மின்னஞ்சல்கள் மூலம் சாமியார் அனுப்பியுள்ளவற்றில் உள்ள தகவல்களுக்கும் முரண்பாடுகள்தான் அதிகம் எனவும் ஊடகங்கள் சுட்டி காட்டுகின்றன. சித்ரா ராமகிருஷ்ணன் மீது செபி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ஏவியது.
அபராதம், செயல்பாடுகளுக்கு தடை என அமல்படுத்தியது. நாட்டின் தேசிய பங்கு சந்தையின் ஒவ்வொரு நிகழ்வையும் அலுவலக நிகழ்வு, பங்கு சந்தை நிலவரம், அலுவலக பணி மாற்றங்கள் என அத்தனையையும் முகம் தெரியாத ஒரு சாமியாருடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார் சித்ரா ராமகிருஷ்ணன்.
இது தொடர்பாக செபி அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அவரை 20 ஆண்டுக்கு முன்னர்தான் பார்த்தேன்.. அதன்பிறகு ஒருசில இடங்களில் சந்தித்தேன். எனக்கு மானசீகமான வழிகாட்டி. அவர் ஒரு தவயோகி என்றெல்லாம் கூறியிருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணன்.
ஆனால் சித்ரா சொன்னது அத்தனையும் பொய் என்பதை சாமியார் அனுப்பிய மின்னஞ்சல்களை சுட்டிக்காட்டி ஊடகங்கள் எழுதியுள்ளன. உதாரணமாக 2015-ம் ஆண்டு பிப்ரவரி 17-ல் சாமியாரிடம் இருந்து சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஒரு இ மெயில் வருகிறது. அதில், பேக்கை எல்லாம் ரெடியாக வெச்சிருங்க.. அடுத்த மாதம் சீஷெல்ஸுக்கு போக ப்ளான் செய்திருக்கிறேன்.
என்னுடன் வர முடியுமானால் முயற்சி செய்யலாம். உங்களுக்கு தேவையானதை சேசு செய்வார். அப்புறம் நீச்சல் தெரிந்தால், அங்கே கடலில் குளித்துவிட்டு கடற்கரையில் ரெஸ்ட் எடுக்கலாம் என்றெல்லாம் நீள்கிறது. இன்னொரு மின்னஞ்சல் சித்ரா ராமகிருஷ்ணன் அழகைப் பற்றியது. 2015-ம் ஆண்டு பிப்ரவரி 18-ல் அந்த மெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் இன்னைக்கு நீங்கள் ரொம்ப அழகாக இருக்கீங்க.. உங்கள் தோற்றத்தை இன்னும் கவர்ச்சியாகவும் மாத்தனும்னா உங்கள் தலைமுடியை பிளாட் செய்யலாம். அதுக்கு நீங்கள் நிறைய கற்றுக் கொள்ளனும். மார்ச் மாதத்தின் நடுவில் கொஞ்சம் ப்ரீயாக இ சருங்க எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015 செப்டம்பர் 16-ந் திகதி மெயிலில், மகர குண்டல பாடலை கேட்டீங்களா? உங்கள் முகம் மற்றும் இதயத்திலிருந்து வரும் மகிழ்ச்சியை பார்த்து சந்தோஷப்படுகிறேன் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகர குண்டலம் என்பது திருப்புகழில் உள்ளது. இது காம உணர்வுகளை பக்தியுடன் இணைக்கக் கூடிய பாடல். மகர குண்டல பாடல் பற்றி சாமியார் தெரிந்திருக்க முடியும் எனில் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவே இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் இந்த மெயில் வெளிப்படுத்துகிறது.
மேலும் உங்களுடன் நேற்றைய நேரத்தை செலவிட்டேன். நீங்கள் செய்த இந்த சின்ன விஷயங்கள் உங்களை ரொம்பவே இளமையாக, சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும் எனவும் விலாவரியாக அந்தரங்கம் குறித்து பேசுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் பிரபலமாக இருக்கும் தமிழ் சாமியார் விரைவில் சிக்கலாம் என கூறப்படுகிறது.