விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தாமல் இவரை தேர்வு செய்யுங்கள்! சீமான் சொல்லும் ஐடியா
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக இதனை செய்யுங்கள் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10 -ம் திகதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் ஆகிய 3 கட்சிகள் மோதுகின்றன.
இந்தத் தேர்தலில் அதிமுக தனக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும், நமது பொது எதிரி திமுகவை அழிக்க இது தான் வழி என்றும் சீமான் வெளிப்படையாக பேசியிருந்தார்.
சீமான் பிரச்சாரம்
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அபிநயாவை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், "நமது நாட்டில் நீர் வளம், நில வளம், மலை வளம், மனித வளம், கடல் வளம் ஆகிய வளங்கள் கொட்டி கிடக்கிறது. ஆனால், இத்தனை வளங்கள் இருந்தும் நம் நாடு ஏன் ஏழ்மையிலும், வறுமையிலும் இருக்கிறது.
இன்னொரு ஆட்சியை கொண்டு வந்தால் மட்டும் என்ன நடந்து விட போகிறது? நமக்கு தேவையானது அரசியல் மாற்றம் தான், ஆட்சி மாற்றம் அல்ல.
இந்த விக்கிரவாண்டி தேர்தலில் ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என எல்லோரும் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டுகிறார்கள். மக்களின் பணத்தை வீணடிக்காதீர்கள்.
இந்த தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்திக்கு அடுத்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என்று பாருங்கள்.
அவரை இடைக்கால எம்எல்ஏவாக தேர்ந்தெடுங்கள். அடுத்த சட்டமன்ற தேர்தல் வரும்போது அந்த தொகுதியிலும் தேர்தல் நடத்துங்கள்" என்று பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |