மருத்துவமனையில் உயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரர்! சோகத்தில் ரசிகர்கள்
நியூசிலாந்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் இதய கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ். கடந்த 1989 முதல் 2006 வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஓய்வு பெற்றவர்.
51 வயதான கிறிஸ் கெய்ர்ன்ஸுக்கு சமீபத்தில் இதயத்தில் கோளாறு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கேன்பராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் மருத்துவர்கள் வழங்கும் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்றும் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் அவர் உயிருக்கு போராடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.