அந்த ஐபிஎல் அணி அவமரியாதை செய்தது; அழுது விட்டேன் - கிறிஸ் கெயில் வேதனை
ஐபிஎல் அணியால் அவமரியாதை செய்யப்பட்டது குறித்து கிறிஸ் கெயில் பேசியுள்ளார்.
கிறிஸ் கெயில்
மேற்கிந்திய தீவுகள் அணி வீரரான கிறிஸ் கெயில், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர், அதிவேக சதம் என ஐபிஎல் தொடரில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் கிறிஸ் கெயில்.
2021 ஐபிஎல் தொடருடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றார். 2025 ஐபிஎல் தொடரில், தனது முன்னாள் அணியான பெங்களூரு கோப்பை வெல்வதை காண மைதானத்திற்கு நேரில் வருகை தந்தார்.
இந்நிலையில், ஐபிஎல் அணி ஒன்று தன்னை சிறு குழந்தை போல் நடத்தி அவமதித்தாக கெயில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அழுதுவிட்டேன்
இது குறித்து பேசிய அவர், "பஞ்சாப் அணியுடன் என்னுடைய ஐபிஎல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. நான் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே முடிந்து விட்டது. பஞ்சாப் அணியால் நான் அவமரியாதை செய்யப்பட்டேன்.
நான் இந்த ஒரு சீனியர் வீரர், இந்த தொடருக்கு மதிப்பு ஏற்படுத்தியுள்ளேன். ஆனால் என்னை சிறு குழந்தை போல் நடத்தினார்கள். முதல்முறையாக என் வாழ்க்கையில் மன அழுத்தத்தை உணர்ந்தேன்.
அப்போது தலைமை பயிற்சியாளர் அணில் கும்பிளேவிடம் பேசும் போது அழுது விட்டேன். அவராலும், அணி நிர்வாகம் நடத்தப்படுவது குறித்தும் ஏமாற்றமடைந்தேன்.
அப்போது பணம் முக்கியமாக தோன்றவில்லை. பணத்தை விட மனநலம் முக்கியமானது.
அப்போது அணித்தலைவராக இருந்த கே.எல்.ராகுல் என்னை அழைத்து, "கெயில் கொஞ்சம் பொறுங்கள். அடுத்த ஆட்டத்தில் விளையாடுவார்கள் என கூறினார். நான் உங்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் என கூறிவிட்டு, எனது பையை எடுத்துக்கொண்டு வெளியேறி விட்டேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |