வீட்டின் கிறிஸ்துமஸ் மரத்தை உற்று பார்த்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! புகைப்படம்
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்திற்குள் கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒளிந்திருந்ததை கண்டு குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.
விஷப்பாம்பு
அதன்படி கிறிஸ்துமஸ் மரத்திற்குள் ஆறரை அடி கொண்ட மம்பா கருப்பு நிற கொடிய விஷப் பாம்பு இருப்பதை கண்டு குடும்பத்தார் அலறினர். இதையடுத்து பாம்பு பிடிப்பதில் வல்லவரான நிக் ஈவன்ஸ் அங்கு வரவழைக்கப்பட்டார். பின்னர் லாவகமாக அவர் பாம்பை பிடித்தார்.
கிறிஸ்துமஸ் மரத்தின்...
பின்னர் நிக் கூறுகையில், சாண்டா எனக்கு கிறிஸ்துமஸ் பரிசை அளித்துள்ளார், ஆனால் இது என் வீட்டில் அல்ல! வேறொருவரின் வீட்டில்..! அந்த வீட்டின் தோட்ட பகுதியில் இருந்த பாம்பு அங்கிருந்து நகர்ந்து உள்ளே வந்திருக்கிறது, பிறகு கிறிஸ்துமஸ் மரத்தின் மீது ஏறி அதன் மேலே உட்கார்ந்திருந்தது என தெரிவித்துள்ளார்.
தங்கள் வீட்டில் இவ்வளவு பெரிய விஷப்பாம்பு இருந்த அதிர்ச்சியில் இருந்து குடும்பத்தார் இன்னும் மீளவில்லை.