புடின் ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தத் தயாராகலாம்: சிஐஏ தலைவர் விடுத்த எச்சரிக்கை
CIA Chief's mystery trip to moscow: ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு CIA தலைவர் எச்சரிக்கை விடுத்தது தெரிய வந்துள்ளது.
ஐரோப்பாவுடன் விளாடிமிர் புடின் போரைத் தொடங்கக்கூடும் என்ற அச்சத்திற்கு இடையே, CIA தலைவர் அவருக்கு விடுத்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவுடன் போரைத் தொடங்கக்கூடும்
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஐரோப்பாவுடன் போரைத் தொடங்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த சூழலில், அமெரிக்காவின் CIA இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் (John Ratcliffe) ரஷ்யாவிற்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.
அவர் புடினிடம், அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது உக்ரைனின் மேற்கத்திய நட்பு நாடுகளை குறிவைப்பதன் மூலமோ உக்ரைன் மோதலை தீவிரப்படுத்த வேண்டாம்; அதை செய்யாதீர்கள் என்று எச்சரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரேனிய போர்க்களத்தில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மீண்டும் தேக்கமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாகவும், தீவிரமாகவும் செயல்படத் தயாராக உள்ளனர் என்ற அமெரிக்க உளவுத்துறையின் தகவலின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கூறியதாக தெரிய வந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |