ஹிட்லர் ரகசியமாக உயிர் தப்பியதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள ஆவணங்களில் அம்பலம்
அமெரிக்க உளவுத்துறையான CIA பொதுமக்கள் பார்வைக்கு என வெளியிட்டுள்ள ஆவணங்களில் ஹிட்லர் ரகசியாக தப்பியதாக பதிவாகியுள்ளது.
தென் அமெரிக்காவில்
ஜேர்மனியில் பதுங்கு குழி ஒன்றில் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதாக உலகமே நம்பும் நிலையில், ஹிட்லரை தேடிக் கண்டுபிடிக்கும் ஒரு ரகசிய திட்டத்தை அமெரிக்க உளவு அமைப்பான CIA முன்னெடுத்ததாக தெரிய வந்துள்ளது.
அதாவது ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு CIA விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளியான தரவுகளின் அடிப்படையில் தென் அமெரிக்காவில் உள்ள உளவாளிகள் 1950களில் ஹிட்லர் இன்னும் உயிருடன், வேறு பெயருடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என நம்பியுள்ளனர்.
மட்டுமின்றி, கொலம்பியாவில் ஹிட்லரின் புகைப்படம் ஒன்றையும் கண்டுபிடித்ததாக உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார். 1945 ஏப்ரலில் ஹிட்லர் ஜேர்மன் பதுங்கு குழியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், நேச நாட்டுப் படைகள் எரிந்த உடலைக் கண்டுபிடித்த போதிலும், 2020ல் வெளியிடப்பட்ட அமெரிக்க உளவுத்துறை ஆவணங்களில், ஹிடல்ர் ரகசியமாக தப்பியதாகவே பதிவாகியுள்ளது.
இதனையடுத்து சுமார் பத்தாண்டுகள் அமெரிக்கா ஹிட்லரை தீவிரமாக தேடியுள்ளது. 1955ல் ஹிட்லர் தப்பியதாக கண்டறிந்த நபருடன் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையும் முன்னெடுத்துள்ளனர்.
அர்ஜென்டினா மீண்டும் விசாரிக்க
இந்த நிலையில் தற்போது அர்ஜென்டினா இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 80 ஆண்டுகளுக்கு முன்னர் போர் குற்றங்களில் ஈடுபடும் நாஜி வீரர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க அர்ஜென்டினாவில் தலைமறைவாக வாழ்ந்துள்ளனர்.
அந்த வகையில் ஹிட்லரும் அர்ஜென்டினாவில் தலைமறைவாகியிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. மேலும், அர்ஜென்டினாவில் உள்ள spa ஹொட்டல் ஒன்றில் ஹிட்லருக்கு ரகசிய அறை இருப்பதாகவும் அமெரிக்க ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1955 அக்டோபர் 3ம் திகதி பதிவான ஆவணம் ஒன்றில் ஹிட்லர் ரகசியமாக தென் அமெரிக்காவுக்கு தப்பியதாக பதிவாகியுள்ளது. ஹிட்லர் தொடர்பான விவகாரத்தில் இனி அர்ஜென்டினா வெளிச்சத்திற்கு கொண்டுவரும் ஆவணங்களுக்காக வரலாற்று ஆய்வாளர்கள் தரப்பு காத்திருப்பதாக கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |