ஈரான் விடுத்த அச்சுறுத்தல்... ஐக்கிய அமீரகத்தில் முக்கிய அமெரிக்க வங்கி கிளைகள் மூடல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வங்கிகள் மற்றும் நிதி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அச்சுறுத்தல் விடுத்திருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் அமெரிக்க வங்கி ஒன்று தனது கிளைகளை மூட முடிவு செய்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அமெரிக்க வங்கியான Citibank இந்த முடிவை அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 14 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதன் கிளைகள் மற்றும் நிதி மையங்களை மூட இருப்பதாக உத்தியோகப்பூர்வ இணைய பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் நெருக்கடி தீவிரமடைவதால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வங்கிகள் தங்கள் ஊழியர்களுக்கு விடுப்பு அளித்து வருதைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், மார்ச் 16 முதல் மூடப்பட்டுள்ள இந்த கிளைகள் அனைத்தும் தொடர்ந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய துபாயில் உள்ள எமிரேட்ஸ் மாலில் அமைந்துள்ள ஒரு கிளை மட்டும் இந்தக் காலகட்டத்தில் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் DIFC மற்றும் Oud Metha பகுதியில் அமைந்துள்ள அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் குடியிருப்பில் இருந்தே பணியாற்ற Citibank நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

அனைத்துக் கிளைகளும்
இதனிடையே, HSBC வங்கியின் கத்தாரில் செயல்படும் அனைத்துக் கிளைகளும் மறு அறிவிப்பு வெளியாகும் வரையில் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரானில் பழமையான வங்கி ஒன்றின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையிலேயே ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.
தங்கள் வங்கி மீது நடத்தப்பட்டத் தாக்குதலுக்கு உறுதியாக பதிலடி தரப்படும் என ஈரான் ஜனாதிபதியும் இராணுவமும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |