சமூக ஊடகத்தில் இஸ்ரேலுக்கு எதிரான கருத்து: பிரபல வங்கி ஊழியருக்கு ஏற்பட்ட சிக்கல்
அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிராக சமூக ஊடக பக்கத்தில் கருத்து தெரிவித்த Citibank ஊழியரை அந்த நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
ஏன் ஹிட்லர் அவர்களை
Citibank ஊழியரான Nozima Husainova என்பவரே இஸ்ரேலுக்கு எதிரான கருத்தை பதிவிட்ட காரணத்தால் வேலையை இழந்துள்ளார். தமது சமூக ஊடக பக்கத்தில், இப்போது தான் புரிகிறது ஏன் ஹிட்லர் அவர்களை மொத்தமாக அழிக்க விரும்பினார் என்று என குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. வெறுப்பு பேச்சுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கப்பட்டது. பலர் Citi குழுமத்தை தொடர்புகொண்டு, இதே கருத்தை நிர்வாகம் ஆதரிக்கிறதா என கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து பதிலளித்த Citi குழுமம், உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என உறுதி அளித்தது. தொடர்ந்து, மதவெறி மற்றும் பிற வெறுப்புப் பேச்சுகளை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம் எனவும் குறிப்பிட்டது.
நிர்வாகம் ஏற்பதில்லை
இதன் பின்னர், தமது ஊழியரை வேலையில் இருந்து நீக்கியுள்ளதாக Citi குழுமம் அறிவித்தது. மேலும் இதுபோன்ற செயல்களை நிர்வாகம் ஏற்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
@getty
அந்த ஊழியருக்கு எதிரான நடவடிக்கையை பலர் பாராட்டியுள்ளதுடன், நன்றியும் தெரிவித்துள்ளனர். வெளியான தகவலின் அடிப்படையில், அந்த ஊழியர் Citibank நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இது இரண்டாவது ஆண்டு எனவும், ஆண்டுக்கு சுமார் 72,000 டொலர் ஊதியமாக பெற்று வந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |