57 இஸ்லாமிய நாடுகளின் குடிமக்கள் பிரான்சுக்குள் நுழைய தடை: சமூக ஊடக செய்தியால் பரபரப்பு
பிரான்சில் வெளிநாட்டு இளைஞர் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதிலிருந்தே பிரான்ஸ் குறித்த பல சர்ச்சைக்குரிய செய்திகள் இணையத்தில் பரவிவருகின்றன.
57 இஸ்லாமிய நாடுகளின் குடிமக்கள் பிரான்சுக்குள் நுழைய தடை
இந்நிலையில், 57 இஸ்லாமிய நாடுகளின் குடிமக்கள் பிரான்சுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ளது. இந்தியர்களுக்கு மட்டும் இந்த தடையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு சமூக ஊடகத்தில் இந்த செய்தி வேகமாகப் பகிரப்பட்டும் வருகிறது.
உண்மை நிலை என்ன?
ஊடகம் ஒன்று இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், அந்த செய்தியில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.
இந்தியாவிலுள்ள பிரெஞ்சு தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்படி ஒரு அறிவிப்போ, பயண எச்சரிக்கையோ கொடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, பிரான்சிலுள்ள விசாக்களுக்கான அதிகாரப்பூர்வ இணையதளமும் இப்படி இஸ்லாமியர்கள் மீதான தடை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
ஆகவே, 57 இஸ்லாமிய நாடுகளின் குடிமக்கள் பிரான்சுக்குள் நுழைய தடை என்று கூறும் அந்த சமூக ஊடக தகவல் போலியானது என தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |