ஜேர்மனியில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டும் குடியுரிமை கிடைப்பதில் தாமதம்: சலிப்பில் புலம்பெயர்ந்தோர்
ஜேர்மனியில் புதிய புலம்பெயர்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டும், குடியுரிமைக்கு காத்திருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை கிடைத்தபாடில்லை.
இதனால், குடியுரிமைக்காக நீண்டகாலமாக காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் சலிப்படைந்துள்ளார்கள்.
சலிப்படைந்துள்ள புலம்பெயர்ந்தோர்
ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த நான், ஜேர்மனிக்கு எனது பங்களிப்பைச் செய்கிறேன். மொழி கற்கச் சொன்னார்கள், மொழி கற்றேன், மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்கிறேன், பணி செய்கிறேன், சிறிது காலத்துக்குப் பிறகு எனக்கு குடியுரிமை கிடைக்கும் என நம்பியிருந்தேன். ஆனால், அது இன்னமும் நடக்கவில்லை என்கிறார் Maria Zadnepryanets.
Image: Ben Knight/DW
அவர் மட்டுமல்ல, மரியாவைப் போலவே பலர் குடியுரிமை கிடைக்கும் என காத்திருந்து சலிப்படைந்துள்ளார்கள்.
தாமதத்துக்கு காரணம் என்ன?
இப்படி பலரும் குடியுரிமைக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தும், ஜேர்மனியில் புதிய புலம்பெயர்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டும், அவர்களுக்கு இதுவரை குடியுரிமை கிடைக்கவில்லை. புலம்பெயர்தல் அதிகாரிகளிடமிருந்து பதிலுமில்லை.
விடயம் என்னவென்றால், வழக்கமாக 12 முனிசிபல் அதிகாரிகள் குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு அந்த நடைமுறையை அரசு மாற்றிவிட்டது.
Image: Winfried Rothermel/picture alliance
இப்போது, LEA என்னும் ஒரே மத்திய புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமை அலுவலக அமைப்புதான் குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிக்கிறது.
ஆகவேதான் இந்த தாமதம். LEA அலுவலகத்தில் 2005 முதல் அளிக்கப்பட்ட சுமார் 40,000 குடியுரிமை விண்ணப்பங்கள் குவிந்துகிடக்கின்றன.
ஆக, எனது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட, மேலும் ஐந்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது என்கிறார் மரியா. ஆக, மரியாவைப்போல சிலர் சட்டப்படி இந்த பிரச்சினையை அணுகலாமா என யோசிக்கத் துவங்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |