உக்ரைனில் ஒரு நகரமே சிதைந்து கிடக்கும் பயங்கரம்... நெஞ்சை உலுக்கும் காட்சி
உக்ரைனின் மரியுபோல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
குறித்த வீடியோவை மரியுபோல் நகர கவுன்சில் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மரியுபோல் நகர சபையால் வெளியிடப்பட்ட புதிய வீடியோ காட்சிகள், நகரின் கிழக்கு குடியிருப்பு மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் அழிக்கப்பட்டு சிதைந்து கிடப்பதை காட்டுகிறது.
தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு துறைமுக நகரமான மரியுபோல், ரஷ்யாவின் போரின் தொடக்கத்தில் இருந்து அதிக குண்டுவீச்சுக்கு ஆளாகி உள்ளது.மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், முக்கிய போர்க்கப்பல் மூழ்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கர ஆயுதங்களால் உக்ரைன் மீது சரமாரி தாக்குதல்களை ரஷ்ய நடத்திவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தலைநகர் கீவ், கார்கிவ், கெர்சன் மற்றும் மரியுபோலில் ரஷ்யா மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Published by Mariupol City Council, the new video shows destroyed apartment buildings in the city's Eastern residential district.
— The Kyiv Independent (@KyivIndependent) April 16, 2022
Mariupol, a seaport in southeastern Ukraine, has been heavily bombarded since the beginning of Russia's all-out war and besieged since early March. pic.twitter.com/kscGaoVJDn
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷ்ய தீவிரமாக முயற்சித்து வருவதாக உக்ரைனின் ஆயுதப் படைகளின் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
மரியுபோல் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டல், இந்த போரில் இரு தரப்பினருக்கும் உளவியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.