பிரித்தானியாவில் அரசு ஊழியர்களுக்கு பேரிடி: பிரதமர் போரிஸ் உத்தரவால் பரபரப்பு

Boris Johnson
By Arbin May 13, 2022 08:30 AM GMT
Report

பிரித்தானியாவில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை ஐந்தில் ஒரு பங்காக குறைக்க அமைச்சர்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த முடிவால் 3.5 பில்லியன் பவுண்டுகள் வரையில் சேமிக்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்க அரசாங்கத்தின் செலவைக் குறைக்க முடிவெடுத்துள்ளோம் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தொற்று காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ள பிரதமர் ஜோன்சன், 90,000 ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படும் கட்டத்தில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் அரசு ஊழியர்களுக்கு பேரிடி:  பிரதமர் போரிஸ் உத்தரவால் பரபரப்பு | Civil Service Jobs Will Be Axed

இதனால் சேமிக்கப்படும் பில்லியன்களை வரிக் குறைப்புகளுக்காக பயன்படுத்தலாம் என்று அவர் பரிந்துரைத்துள்ளார். இதனையடுத்து அமைச்சர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சுமார் 91,000 அரசு ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள்.

இந்த முடிவால் ஆண்டுக்கு 3.5 பில்லியன் பவுண்டுகள் சேமிக்க முடியும் என அரசு தரப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், உடனடி பலனாக பொதுமக்களுக்கு வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகள் அமுலுக்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், பலம் வாய்ந்த அரசு ஊழியர்கள் சங்கங்கள் போர்க்கொடி தூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அமைச்சர்கள் கண்டிப்பாக அதன் தாக்கத்தை உணர்வார்கள் என கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் அரசு ஊழியர்களுக்கு பேரிடி:  பிரதமர் போரிஸ் உத்தரவால் பரபரப்பு | Civil Service Jobs Will Be Axed

நேட்டோவில் இணைவதா? இன்னொரு ஐரோப்பிய நாட்டுக்கு மிரட்டல் விடுத்த ரஷ்யா

கொரோனா தொற்றுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்குத் திரும்பும்படி வற்புறுத்தியதற்காக அரசாங்கத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் ஏற்கனவே கசப்புடன் புகார் கூறி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே தற்போது அரசு ஊழியர்களுக்கு வேட்டு வைக்கும் புதிய திட்டத்துடன் போரிஸ் நிர்வாகம் முன்வந்துள்ளது. பிரித்தானியாவில் அரசு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 475,000 என கூறப்படுகிறது.

சராசரியாக ஒரு அரசு ஊழியர் 28,000 பவுண்டுகள் ஊதியமாக பெறுகிறார். மட்டுமின்றி 10,000 பவுட்னுகள் பிற சலுகைகளாக பெறுகிறார். இதன் அடிப்படையிலேயே 91,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கினால் அரசுக்கு 3.5 பில்லியன் பவுண்டுகள் தொகை சேமிக்க முடியும் என கூறப்படுகிறது.  

மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US