நேட்டோவில் இணைவதா? இன்னொரு ஐரோப்பிய நாட்டுக்கு மிரட்டல் விடுத்த ரஷ்யா
நேட்டோ அமைப்பில் இணைவதாக பின்பாந்து முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா, போருக்கு தங்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என மிரட்டல் விடுத்துள்ளது.
பின்லாந்தின் இந்த நகர்வு இருதரப்பு உறவுகளையும், வடக்கு ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையையும் கடுமையாக பாதிக்கும் என்று வெளியுறவு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.
முன்னதாக, பின்லாந்தின் ஜனாதிபதியும் பிரதமரும் நேட்டோ உறுப்பு நாடாகும் முடிவுக்கு தாமதப்படுத்த வேண்டாம் என குறிப்பிட்டிருந்தனர். பின்லாந்து நாடானது 1,300 கி.மீ தொலைவுக்கு ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
நேட்டோ உறுப்பு நாடாகும் முடிவுக்கு வராத வரையில் ரஷ்யாவின் கோபத்திற்கு பின்லாந்து இலக்காகவில்லை. இந்த நிலையில், பாராளுமன்றம் மற்றும் பிற மூத்த அரசியல் பிரமுகர்களால் பரிசீலிக்கப்பட்ட பின்னர் பின்லாந்து தனது முடிவை ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
இதேவேளை ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணையும் தங்கள் முடிவை ஞாயிறன்று அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு நேட்டோ அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்தை வழங்குவதில் துரித முடிவெடுக்கப்படும் என நேட்டோ பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை சந்தித்திராத பேரிடி... சின்னாபின்னமான ரஷ்ய துருப்பு: உக்கிரமாக மாறிய உக்ரைன்
மேலும், நேட்டோ உறுப்பினர் அந்தஸ்துக்கு இரு நாடுகளும் விண்ணப்பித்தால் அமெரிக்கா ஆதரிக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, இராணுவ-தொழில்நுட்ப மற்றும் பிற நகர்வுகள் என இரண்டிலும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க ரஷ்யா கட்டாயப்படுத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.