இதுவரை சந்தித்திராத பேரிடி... சின்னாபின்னமான ரஷ்ய துருப்பு: உக்கிரமாக மாறிய உக்ரைன்
உக்ரைனின் டான்பாஸில் ஆற்றைக் கடக்கும் ரஷ்ய துருப்புகளின் முயற்சியை உக்ரைன் வெற்றிகரமாக முறியடித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதில் டசின் கணக்கான வாகனங்கள் கொத்தாக அழிக்கப்பட்டதுடன் பெரும் உயிரிழப்புகளையும் ரஷ்யா எதிர்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வெளியான புகைப்படங்களில், பாலம் ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது, அதன் சுற்றுவட்டாரத்தில் இராணுவ டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
டன்பாஸ் ஆற்றைக் கடந்து Lysychansk நகரை சுற்றிவளைத்து, கொடூர தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளது ரஷ்யா. ரஷ்ய துருப்புகளின் திட்டத்தை தெரிந்து கொண்ட உக்ரைன் உக்கிர தாக்குதலை முன்னெடுத்து எதிரணியினருக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
மே 7ம் திகதி டான்பாஸ் ஆற்றைக் கடக்க ரஷ்யா திட்டமிட்டு நகர்வை முன்னெடுப்பதாக உக்ரைன் இராணுவ பொறியாளர் ஒருவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் ஆற்றைக் கடக்க திட்டமிட்டுள்ள பகுதியை சரியாக கணித்த அந்த அதிகாரி, தாற்காலிகமான ஒரு பாலத்தை அப்பகுதியில் உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில் மே 8ம் திகதி பகல், ரஷ்ய துருப்புகள் அப்பகுதியில் கரும்புகையை ஏற்படுத்திவிட்டு, பாலத்தை கடக்க முயற்சித்துள்ளது. இதை எதிர்பார்த்து காத்திருந்த உக்ரைன் துருப்புகள் ரஷ்யா மீது உக்கிர தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இதில் 1,500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மட்டுமின்றி 7 நவீன டாங்கிகள் உட்பட மொட்தம் 58 வாகனங்கள் உக்ரைன் துருப்புகளால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.
கார்கீவ் பகுதியில் இருந்து ரஷ்ய துருப்புகளை புறமுதுகிட்டு துரத்திய நிலையில், ,டான்பாஸ் ஆற்றைக் கடக்க திட்டமிட்ட ரஷ்யாவின் திட்டமும் அதிரடியாக முறியடிக்கப்பட்டுள்ளது.
மேலும், Izyum, Kherson மற்றும் Melitopol பகுதிகளில் ரஷ்ய துருப்புகள் தாக்குதலை கைவிட்டதாகவும், தற்காப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கீவ் பகுதியில் இருந்து மொத்தமாக ரஷ்ய துருப்புகள் வெளியேறியது உக்ரைன் துருப்புகளின் வெற்றியாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டான்பாஸ் பகுதியில் உக்ரைன் துருப்புகள் வென்ற்றி பெற்றால் அது விளாடிமிர் புடின் நிர்வாகத்திற்கு பேரிடியாக அமையும் என்றே கூறப்படுகிறது.