தோண்டத் தோண்ட சடலங்கள்... உக்ரைன் தலைநகரில் ரஷ்ய துருப்புகளின் கொலைவெறி
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், உக்ரைன் தலைநகர் கீவ்வில் 20 பொதுமக்களின் சடலங்களை கண்டெடுத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள சடலங்களின் எண்ணிக்கை 1,235 என அதிகரித்துள்ளதாகவும் கீவ் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய துருப்புகளால் கொடூரமாக தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ள புச்சா நகரில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள Borodianka மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தே தற்போது சடலங்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புச்சா நகரம் ரஷ்ய துருப்புகளின் போர் குற்றங்களுக்கு மையமாக அமைந்துள்ளது என்றே அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர். ரஷ்ய துருப்புகள் பின் வாங்கிய பின்னர் கீவ் நகரத்திற்கு சுற்றுவட்டாரங்களில் இருந்து இதுவரை 1,235 சடலங்க:ள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் அப்பாவி பொதுமக்கள் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், 800க்கும் மேற்பட்ட உடல்களை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் பெரும்பாலோர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் என அடையளம் காணப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, 282 உடல்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஏப்ரல் பிற்பகுதியில், 1,020 பொதுமக்களின் சடலங்கள் கீவ் பிராந்தியத்தில் உள்ள பிணவறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ளதாக முக்கிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.