PF கணக்கில் இருந்து பல ஆண்டுகளாக பணம் எடுக்காமல் இருந்தால் என்ன ஆகும்? உங்கள் பணம் கிடைக்குமா?
வேலையில் இருந்து நின்ற பிறகு பல ஆண்டுகளாக PF கணக்கில் இருந்து பணம் எடுக்காமல் இருந்தால் சில பிரச்சினைகள் ஏற்படும். இருப்பினும் அந்த பணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் மீட்க முடியும்.
முன்னதாக, பெயர்வுத்திறன் அம்சம் (portability) இல்லாதபோது, தனியார் துறை ஊழியர்கள் வேறொரு நிறுவனத்துக்கு மாறும் போது, அங்கு மீண்டும் ஒரு புதிய EPF கணக்கைத் திறப்பார்கள்.
இதன் காரணமாக பலருக்கு பல பி.எஃப் கணக்குகள் உள்ளன. இந்த ஊழியர்களில் பலர் தங்கள் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட பிஎஃப் கணக்கு இயங்குவதை அறிந்திருக்க மாட்டார்கள்.
EPF விதிகள் 2011-இல் மாற்றப்பட்டன. இந்த புதிய விதிகள், பிஎஃப் கணக்கில் கடைசி பங்களிப்புக்கு பின் 3 ஆண்டுகளுக்குள் பணத்தை திரும்பப் பெறப்படாவிட்டால், அந்த கணக்கு செயலற்றதாகி (dormant EPF account), வட்டி சம்பாதிப்பதை நிறுத்துகிறது.
செயலற்ற PF கணக்கில் இருந்து பணத்தை பெறுவது எப்படி?
அதன் பிறகு, செயலற்ற நிலையில் 7 ஆண்டுகள் கழித்து, அத்தகைய கணக்குகளில் உள்ள பணம் மூத்த குடிமக்கள் நல நிதிக்கு (Senior Citizen Welfare Fund) மாற்றப்படுகிறது.
இந்த நிலையில், அந்த பணம் உங்களிடமிருந்து நிரந்தரமாக பறிபோனது என நினைக்கவேண்டாம். அடுத்த 25 ஆண்டுகளுக்குள் தேவையான சான்றுகள் மற்றும் ஆவணங்களை வழங்குவதன் மூலம் அந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.