செயலற்ற PF கணக்கில் இருந்து பணத்தை பெறுவது எப்படி?
உங்களில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட EPF கனக்குகளை வைத்திருக்கக்கூடும். முன்னதாக நீங்கள் ஒரு நிறுவனத்திலுருந்து மற்றோரு நிறுவனத்துக்கு மாறும்போது, அந்த நிறுவனத்தின்முலம் மீண்டும் புதிய பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டிருக்கலாம்.
ஆதார் எண், PAN எண் இணைப்பு கட்டாயம் ஆக்கப்படுவதற்கு முன், இதைப்போல் வெவ்வேறு நிறுவனத்துக்கு வெவ்வேறு கணக்குகள் திறக்கப்பட்டிருக்கும். தற்போது ஒருவரது பல கணக்குகள் ஒன்றாக இணைத்துக்கொள்ளும் வசதி வந்துவிட்டது.
ஆனால் ஒரு சிலர், உங்கள் பழைய கணக்கை பல ஆண்டுகளாக கவனிக்காமல், புது கணக்குடன் இணைக்காமல், மற்றும் அதில் இருக்கும் உங்கள் பணத்தை எடுக்காமலும் இருக்கலாம்.
2011-இல் EPF விதிகள் மாற்றப்பட்டன. இந்த புதிய விதிகள், பிஎஃப் கணக்கில் உங்களது கடைசி பங்களிப்புக்கு பின் 3 ஆண்டுகளுக்குள் பணத்தை திரும்பப் பெறப்படாவிட்டால், அந்த கணக்கு செயலாற்ற கணக்காக (Dormant EPF account) மாற்றப்படும். அந்த பிறகு அந்த கணக்கில் இருக்கும் பணத்துக்கு வட்டி நிறுத்தபடும். இவ்வாறு உங்கள் EPF அக்கவுண்ட் செயலாற்றதாக ஆன பிறகு, அதிலிருந்து பணத்தை எடுக்க சில விதிமுறைகள் உள்ளன.
பல ஆண்டுகளாக PF கணக்கில் இருந்து பணம் எடுக்காமல் இருந்தால் என்ன ஆகும்? உங்கள் பணத்துக்கு ஆபத்தா?
செயலற்ற ஈபிஎஃப் கணக்குகளிலிருந்து (dormant EPF account) பணத்தை எவ்வாறு கோருவது?
EPFO ஒரு ஆன்லைன் சேனலைக் கொண்டுள்ளது. அதன் மூலமாக பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் செயலற்ற கணக்குகளில் உள்ள பணத்தை கோரலாம்.
அதற்கு நீங்கள் EPFO இணையதளத்தில் உள்நுழைந்து (sign-in) செயல்படாத ஹெல்ப் டெஸ்க் (Inoperative Helpdesk) செல்ல வேண்டும். அங்கு உங்கள் செயலற்ற ஈ.பி.எஃப் கணக்கின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து ஆதார் எண், பான் எண், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி கோடு போன்ற கே.ஒய்.சி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பின்னர் EPFO ஊழியர்களால் சரிபார்க்கப்பட்டு செயலாக்கப்படும்.
நீங்கள் இன்னும் பணியில் இருந்தால், பி.எஃப் பணத்தை திரும்பப் பெறாமல் இருப்பது நல்லது. வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு நீண்ட கால பாதுகாப்பு வலையாகும், எனவே நீங்கள் அதை இப்போது செயலில் உள்ள பி.எஃப் கணக்கிற்கு மாற்றிக்கொள்ள (transfer) அறிவுறுத்தப்படுகிறது.
[T70UH8 ]
EPFO யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) கொடுத்து இருந்தாலும், நீங்கள் உங்கள் செயலற்ற கணக்கிலிருந்து பணத்தை, இப்போது இருக்கும் கணக்கிற்கு மாற்ற வேண்டும். இப்படி செய்வதன் மூலம், செயலற்ற கணக்கில் உள்ள தொகைக்கும் சேர்த்து வட்டி கொடுக்கப்படும்.
ஒருவேளை கணக்கின் உரிமையாளர் இறந்துவிட்டால், அவரது நாமினி அந்த பணத்தை பெறுவார்கள். ஆனால், அதற்கும் ஒரு கால அவகாசம் உள்ளது. 25 ஆண்டுகளாக அந்த பணத்தை அதன் உரிமையாளரோ அல்லது நாமினியோ கோராமல் இருந்தால், அந்த பணம் முழுக்க மூத்த குடிமக்கள் நல நிதிக்குச் சென்றுவிடும். அதன் பிறகு, அது அரசாங்கப் பொக்கிஷங்களுக்குச் செல்லும் என்று கூறப்படுகிறது.
அதேபோல், சந்தாதாரர் (கணக்கின் உரிமையாளர்) பரிந்துரைக்கப்பட்ட விவரங்களை (nominee details) குறிப்பிடாமல் இறந்துவிட்டால், அல்லது அவரது உயிலில் பி.எஃப் கணக்கு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றால், அவரது செயலற்ற பி.எஃப் கணக்கில் உள்ள தொகையை கோருவது கடினம்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் succession certificate அல்லது legal heir certificate வழங்க வேண்டும். இதற்காக வாரிசுகள் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.
சான்றிதழை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் எந்தவொரு இழப்பையும் ஈடுசெய்ய விண்ணப்பதாரர் sureties/securities பத்திரத்தை வழங்க வேண்டியிருக்கும்.
இங்கே குறிப்பிட வேண்டியது என்னவென்றால், ஈபிஎஃப் கணக்கை ஆதார் உடன் இணைப்பது இப்போது கட்டாயமாக உள்ளது, இதனால் நிதியை திரும்பப் பெற சந்தாதாரரின் அடையாளத்தை தவறாக பயன்படுத்த முடியாது.