பிரிக்ஸ் மாநாட்டில் சீன ஜனாதிபதி மயங்கி விழுந்ததாக பரவும் தகவல்

Xi Jinping China BRICS summit
By Karthikraja Sep 17, 2026 07:14 AM GMT
Report

Wanjun Xie claims china president xi jinping fainted at brics summit: பிரிக்ஸ் மாநாட்டிற்கு வருகை தந்த போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மயங்கி விழுந்ததாக தகவல் பரவி வருகிறது.

பிரிக்ஸ் மாநாட்டில் மயங்கி விழுந்த ஷி ஜின்பிங்

டெல்லியில் கடந்த செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் 18வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது.

இதில், இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

பிரிக்ஸ் மாநாட்டில் சீன ஜனாதிபதி மயங்கி விழுந்ததாக பரவும் தகவல் | Claims On China Xi Jinping Fainted At Brics Summit

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உரையாற்றிக்கொண்டிருந்த போது, ஷி ஜின்பிங் அசௌகரியமாக உணர்ந்ததால் மோடி உரையை நிறுத்திவிட்டு, ஜின்பிங்கின் மொழிபெயர்ப்பாளரை நோக்கி “Is it OK?” எனக் கேட்டார்.

மைக்ரோஃபோன் கோளாறு அல்லது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டாலும், ஜின்பிங் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளாரா என பலரும் சந்தேகம் எழுப்பினர்.  

பிரிக்ஸ் மாநாட்டில் சைவ உணவு - விருந்தை புறக்கணித்த சீன ஜனாதிபதி, அபுதாபி பட்டத்து இளவரசர்

பிரிக்ஸ் மாநாட்டில் சைவ உணவு - விருந்தை புறக்கணித்த சீன ஜனாதிபதி, அபுதாபி பட்டத்து இளவரசர்

அதைத்தொடர்ந்து, அன்று இரவு பிரதமர் மோடி அளித்த இரவு விருந்திலும் ஷி ஜின்பிங் கலந்து கொள்ளாதது சந்தேகத்தை வலுப்படுத்தியது. 

பிரிக்ஸ் மாநாட்டில் சீன ஜனாதிபதி மயங்கி விழுந்ததாக பரவும் தகவல் | Claims On China Xi Jinping Fainted At Brics Summit

இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டிற்கு வருகை தந்த ஜின்பிங் மயங்கி விழுந்ததாகவும், பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் சீன ஜனநாயகக் கட்சியின் தலைவர் வான்ஜுன் ஷியே எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியா நடத்திய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஷி ஜின்பிங் மயங்கி விழுந்ததாக தகவல் பரவியுள்ளது.

அவருடன் சென்ற மருத்துவக் குழுவினரால் அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அவர் தனது இந்தியப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு ஒரு சிறப்பு விமானத்தில் சீனாவுக்குத் திரும்பினார். 

பெய்ஜிங் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது, ​​அவரை வரவேற்க பெய்ஜிங் அதிகாரிகள் ஒரு பெரிய அதிகாரிக் குழுவையோ அல்லது வரவேற்பு விழாவையோ ஏற்பாடு செய்யவில்லை.

மாறாக, ஷி ஜின்பிங்கை அவசர சிகிச்சைக்காக பெய்ஜிங்கின் 301 மருத்துவமனைக்கு நேரடியாகக் கொண்டு செல்ல ஒரு ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.

பெய்ஜிங்கின் 301 மருத்துவமனையின் நிபுணர் குழுவின் பரிசோதனைக்குப் பிறகு, ஷி ஜின்பிங்கிற்கு கடுமையான இஸ்கிமிக் பக்கவாதம், அதாவது தற்காலிக பெருமூளை இரத்த உறைவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தனது உடல்நிலை குறித்த தகவல்களை இந்தியத் தரப்பு பெற்றுவிடுமோ என்று ஷி ஜின்பிங் அஞ்சியதால், அவர் இந்திய மருத்துவமனையில் அவசர சிகிச்சையை மறுத்து, சிகிச்சைக்காக பெய்ஜிங்கிற்கு ஒரு சிறப்பு விமானத்தில் திரும்பினார்.

விமானப் பயணத்தின்போது, ​​அறுவை சிகிச்சைக்கான நிலைமைகள் இல்லாததால், ஷி ஜின்பிங்கின் உயிரைக் காப்பாற்ற மருத்துவக் குழுவினரால் பழமையான சிகிச்சைகளை மட்டுமே அளிக்க முடிந்தது. இதன் விளைவாக, அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கான பொன்னான வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

பெய்ஜிங்கின் 301 மருத்துவமனையில் கூட, ஷி ஜின்பிங்கிற்கு சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், கடுமையான பின்விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

தற்போது, ​​அமெரிக்கப் பயணத்திற்கு முன்பு ஷி ஜின்பிங் குணமடைவாரா என்பதை பெய்ஜிங் அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. எனவே, செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறவிருந்த அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருக்குமா என்பதைப் பொறுத்திருந்து அவர்கள் காத்திருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மற்ற பதிவுகளில், ஷி ஜின்பிங்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், அவர் இன்னும் அபாயகட்டத்தில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இது ஆதாரமற்ற தகவல் என பலரும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து சீனா மற்றும் இந்தியா தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

சீன ஜனநாயகக் கட்சி சீனாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வான்ஜுன் ஷியே அமெரிக்காவில் வசித்து வருகிறார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US