ஸ்காட்லாந்தின் Bonfire Night கொண்டாட்டத்தில் வன்முறை: காவல் துறையின் கார் எரிப்பு
Clash sparks at Scotland Bonfire Night, police car Torched: ஸ்காட்லாந்தில் நடைபெற்ற நெருப்புத் திருவிழாவில்(Bonfire Night) கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது.
காவல் துறையின் கார் எரிப்பு
ஸ்காட்லாந்து முழுவதும் நடைபெற்ற நெருப்புத் திருவிழாவில்(Bonfire Night) கொண்டாடப்பட்ட நிலையில், பட இடங்களில் மோதல்களும், அசம்பாவிதங்களும் அரங்கேறியுள்ளன.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் பாதுகாப்பு மற்றும் அவசரகால பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கிளாஸ்கோ பகுதியில் கிரீன்சைடு சாலையில் படுகாயமடைந்த நபரை மீட்பதற்காக சென்ற போது அவசரகால பணியாளர் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறையினர் ரோந்து வாகனம் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 16 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த கொண்டாட்டங்களில் அசம்பாவிதங்கள் அரங்கேறி இருந்தாலும், இந்த முறை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெரிய சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாக அதிகாரி டேவிட் ராபர்ட்சன் தெரிவித்துள்ளார்.