பிரான்சில் முகமூடி அணிந்த நபர்களால் வெடித்த வன்முறை: 400 பேர் கைது
Clashes Erupt Across France, 400 Protesters Arrested: விலைவாசி உயர்வை கண்டித்து பிரான்ஸ் முழுவதும் மக்கள் நடத்திய போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளது.
பிரான்சில் வெடித்த வன்முறை
பிரான்சின் முக்கிய நகரங்களில் விலைவாசி உயர்வு, மேம்பட்ட கல்வி வசதி மற்றும் சிறந்த கல்வியல் சூழல் ஆகிய பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது.
இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
பிரான்சின் உள்துறை அமைச்சகம் வழங்கிய தகவல்படி, சனிக்கிழமை மதியம் சுமார் 3 மணி நிலவரப்படி இதுவரை 277 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.
பிரான்ஸின் முக்கிய நகரங்களான பாரிஸ், மார்சேய், டூலூஸ் மற்றும் ரென்னெஸ் ஆகியவற்றில் முகமூடி அணிந்த வன்முறை குழுக்கள் மோதலில் ஈடுபட்டதால் தற்போது இந்த கைது நடவடிக்கை தீவிரமடைந்து இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொதுசொத்துகளுக்கு தீ வைத்தது, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியது. மற்றும் அரசு மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியது ஆகியவற்றில் வன்முறை குழுக்கள் ஈடுபட்டதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த வன்முரை சம்பவங்களுக்கு அல்ட்ரா லெப்ட் என்ற இடதுசாரி அமைப்பு முக்கிய காரணம் என்று அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.