உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் தோன்றியுள்ள களிமண் மனிதர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு விடயம்
ரஷ்யாவில் ஆங்காங்கே உக்ரைன் கொடியிலுள்ள நிறங்களான மஞ்சள் மற்றும் நீல நிறத்திலான பொம்மைகள் தோன்றத் துவங்கியுள்ளன.
அவற்றின் கைகளில் பொருத்தப்பட்டுள்ள சிறு அட்டைகளில், போருக்கெதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
அதாவது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஊடுருவலை எதிர்க்கும் ரஷ்ய மக்கள், தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ஆங்காங்கே இதுபோன்ற களிமண் பொம்மைகளை செய்து வைக்கத் துவங்கியுள்ளார்கள்.
இது குறித்து வெளியான ட்வீட் ஒன்றில், அந்த ட்வீட்டை வெளியிட்டவர், எதிர்ப்பைத் தெரிவிக்க பல வழிகள் உள்ளன. ஆனால், ரஷ்யாவைப் பொருத்தவரை இன்றைய சூழலில் எதிர்ப்பு தெரிவிப்பது ஆபத்தானது. ஆகவேதான் எதிர்ப்பைத் தெரிவிக்க மாற்று வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவில், உக்ரைன் போருக்கு எதிர்ப்பைத் தெரிவித்து பேரணிகளில் ஈடுபட்ட 15,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Everywhere in Russia, small clay persons show up that protest against the war in @Ukraine
— Bert Blocken ??✊? (@realBertBlocken) June 3, 2022
"None of them has yet been arrested". Source: @demorgen#ukraine @MFA_Ukraine #RussianAggression #ukrainewar #ukraineunderattack #Russian #RussianArmy #Protests pic.twitter.com/mD9ND0KGhJ