சிறிய நகரத்தில் இருந்து வந்தவர்.., முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை
முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற சாதனை மனிதரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
யார் அவர்?
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் (சிஎஸ்இ) தேர்ச்சி பெறுவது எளிதான காரியமல்ல. சில நேரங்களில், தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அல்லது ஐஆர்எஸ் போன்ற விரும்பிய பதவிகளைப் பெற பல ஆண்டுகள் ஆகும்.
ஆனால், பீகாரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்த சத்யம் காந்தி 2020 ஆம் ஆண்டு UPSC தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே அகில இந்திய தரவரிசை (AIR) 10 வது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.
இவர், தனது கடின உழைப்பாலும் ஆர்வத்தால் இளம் வயதிலேயே மைல்கல்லை அடைந்தார். இவரை பற்றி தற்போது நாம் பார்க்கலாம்.
பீகாரின் சமஸ்திபூரைச் சேர்ந்த சத்யம் காந்தி, கேந்திரிய வித்யாலயாவில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் தயாள் சிங் கல்லூரியில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.
கல்லூரியின் இறுதியாண்டில் நாட்டின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றான UPSC CSE-க்குத் தயாராக முடிவு செய்தார். இதற்காக, டெல்லியின் ராஜேந்திர நகருக்குச் சென்றார்.
தனது பயிற்சி வகுப்புகளுடன் சுய படிப்பிலும் சத்யம் காந்தி கவனம் செலுத்தினார். தினமும் 8-9 மணிநேரம் UPSC தேர்வுக்காக அர்ப்பணித்தார்.
இவர், தனது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதற்காக குடும்ப விழாக்களில் கலந்துகொள்வதைத் தவிர்த்தார். மேலும், மாதிரித் தேர்வுகளைப் பயிற்சி செய்தபோது காந்தியின் தன்னம்பிக்கை அதிகரித்தது.
தேவைப்படும் போதெல்லாம் ஆன்லைனையும் பயன்படுத்தினார். இதையடுத்து UPSC CSE 2020 இல் சிறந்த வெற்றியைப் பெற்று அகில இந்திய தரவரிசை (AIR) 10 வது இடத்தைப் பிடித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |