ஒரே ஒரு செடி மட்டுமே இருக்கும் உலகின் மிகச்சிறிய பூங்கா.., பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதை
ஒரே ஒரு செடியை மட்டும் கொண்டுள்ள உலகின் மிகச்சிறிய பூங்காவை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிகச்சிறிய பூங்கா
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலை மற்றும் மாலை வேளைகளில் பூங்காவுக்கு சென்று நடைப்பயிற்சி செய்வதுண்டு. பூங்கா என்றாலே மரங்கள், செடிகள் என்று பசுமையாகவே இருக்கும்.
ஆனால், இங்கு ஒரு பூங்கா ஒன்றில் ஒரே ஒரு செடி மட்டும் தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த பூங்கா கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது.
ஆம், அமெரிக்காவின் ஓரிகானில் போர்ட்லேண்ட் அருகே இருக்கும் மிகச்சிறிய பூங்காவை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.
இந்த பூங்காவின் சிறப்பம்சம் என்னவென்றால் இங்கு ஒரே ஒரு செடி மட்டுமே இருப்பது தான். இந்த பூங்காவுக்கு பின்னால் சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது.
ராணுவ வீரரான டிக் ஃபகன், 1946-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அமெரிக்காவில் உள்ள ஓரிகானுக்கு சென்று பத்திரிக்கையாளராக தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
அப்போது அவர், `மில் எண்ட்ஸ்’ என்ற புனைபெயரில் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். இவரது பத்திரிக்கை அலுவலகத்துக்குக் கீழே பரபரப்பாக இயங்கும் தெரு ஒன்று உள்ளது.
இந்த தெருவில் பள்ளத்தை தோண்டி மின்கம்பம் நடப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், பள்ளம் தோண்டி பல நாட்கள் ஆகியும் மின்கம்பம் நடப்படவில்லை.
இதனால் செடி ஒன்றை அந்த பள்ளத்தில் நட்டு வைத்தார். இது குறித்து மக்களுக்கு எழுத்துகள் மூலம் கட்டுரையாக கூறியுள்ளார்.
இதையடுத்து, இந்த ஒரே ஒரு செடியானது பூங்காக்களின் பட்டியலில் இடம்பிடித்தது. இதற்கு அவருடைய புனைபெயரான மில் எண்ட்ஸ் என்று சூட்டப்பட்டது. மேலும், 'உலகின் மிகச் சிறிய பூங்கா’ என்று உலக சாதனையான கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்தது.
இந்தப் பூங்கா 60.96 சென்டி மீட்டர் சுற்றளவையும், 2,917.15 சென்டி மீட்டர்² பரப்பளவையும் கொண்டுள்ளது.
ஆனால், பள்ளம் தோண்டி மின்கம்பம் நடப்படாமல் போனதை அனைவரும் மறந்துவிட்டனர் என்றே கூறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |