இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்களின் பொருட்கள் அல்லது சேவைகளுக்கு தடை: முக்கிய ஆசிய நாடு அதிரடி
இஸ்ரேலை ஆதரிக்கும் நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளை மொத்தமாக புறக்கணிக்க இந்தோனேசியாவின் உயர்மட்ட இஸ்லாமிய மதகுரு அமைப்பு அழைப்பு விடுத்து ஃபத்வா வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியாவின் உலமா சபை
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே இந்தோனேசியாவின் உயர்மட்ட இஸ்லாமிய மதகுரு அமைப்பு இந்த முடிவுக்கு வந்துள்ளது. மேலும், இந்தோனேசியாவின் உலமா சபை தெரிவிக்கையில்,
@pa
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் போராட்டத்திற்கு இந்தோனேசிய முஸ்லிம்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
மட்டுமின்றி, இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் அமைப்புகள் அல்லது தனி நபர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் எனவும் கருதப்படுவார்கள் என வெளிப்படையாக அறிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியர்களும் முடிந்தவரை பரிவர்த்தனைகள் மற்றும் இஸ்ரேலிய தயாரிப்புகள் மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடையவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
@afp
அத்துடன் காலனித்துவம் மற்றும் சியோனிசத்தை ஆதரிப்பவர்களையும் புறக்கணிக்க கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், பாலஸ்தீனத்துடன் போரில் ஈடுபட்டுள்ள நாட்டை ஆதரிக்கும் நிறுவனங்களை ஒருபோதும் தங்களால் ஆதரிக்க முடியாது என்றும்,
மத்திய கிழக்கில் பரவும் பிரச்சாரம்
அதில் கிடைக்கும் வருமானம் பாலஸ்தீனிய மக்களை கொல்ல பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் மேற்கத்திய நாடுகளில் இயங்கும் நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்க மத்திய கிழக்கில் பரவி வரும் பிரச்சாரத்தை அடுத்தே இந்தோனேசியாவின் உலமா சபை இந்த முடிவுக்கு வந்துள்ளது.
@rex
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் இஸ்ரேலில் இராணுவமயமாக்கப்பட்ட எல்லையைத் தாண்டி தாக்குதலை முன்னெடுத்ததை தொடர்ந்து அந்த நாடு காஸா மீது கொடூரத் தாக்குதலைத் தொடங்கியது.
இதில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 10,800 கடந்துள்ளது. ஆனால், ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் எண்ணிக்கை 1,400 என இதுவரை கூறிவந்த நிலையில், தற்போது 1,200 என தகவல் வெளியாகியுள்ளது.
@afp
பொதுவாக இஸ்லாமிய மத குருக்களில் உயர்மட்ட குழு விடுக்கும் ஃபத்வாக்களுக்கு எந்த சட்டப்பூர்வ சக்தியும் இல்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட முஸ்லீம்-பெரும்பான்மை நாட்டில் உள்ள பக்தியுள்ளவர்களை ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |