கழிவறைக்குள்ளிருந்து கேட்ட கிளிக் சத்தம்,,, பொலிசாரை அழைத்த ஊழியர்: தவிர்க்கப்பட்ட பெரும் அசம்பாவிதம்
அமெரிக்காவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் கழிவறையிலிருந்து கேட்ட சத்தத்தால் சந்தேகமடைந்த ஊழியர் ஒருவர் பொலிசாருக்கு அளித்த தகவலால் பெரும் அசம்பாவிதம் ஒன்று தவிர்க்கப்பட்டது.
அட்லாண்டாவிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் கழிவறையிலிருந்து கிளிக் என்ற சத்தம் கேட்பதை கவனித்த Charles Russell என்ற ஊழியர், அது துப்பாக்கியை லோட் செய்யும் சத்தம் போல் இருந்ததால் உடனடியாக தன் மேலதிகாரிகளை எச்சரித்து பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
உடனடியாக அங்கு ஆயுதங்களுடன் வந்த பொலிசார், அந்த கழிவறையின் முன் நிற்கும்போது, சரியாக வெளியே வந்துள்ளார் அந்த நபர்.
பொலிசாரை அவ்வளவு சீக்கிரம், அவ்வளவு அருகே எதிர்பார்க்காத Rico Marley (22) என்ற அந்த நபர் திகைத்து நிற்க, உடனடியாக அவரை கைது செய்துள்ளனர் பொலிசார்.
அவர் வைத்திருந்த பையை சோதனையிடும்போது, அதில் அவர் ஏராளமான ஆயுதங்கள் வைத்திருந்ததும், அவர் குண்டு துளைக்காத உடை அணிந்திருப்பதும் தெரியவந்தது.
அந்த பல்பொருள் அங்காடி ஊழியரின் சந்தேகத்தால் ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமைதான் கொலராடோவிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்ட நிலையில், அதனால்தான் தனக்கு அந்த கிளிக் சத்தத்தைக் கேட்டதும் சந்தேகம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார் Charles.


