விஜய் கட்சிக்கு விரைவில் மூடு விழா.., இவர் திமுகவின் பிராண்ட் அம்பாசிடர்: விளாசும் அர்ஜுன் சம்பத்
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விரைவில் மூடு விழா நடத்தப்படும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விஜய் எதிர்ப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விருது விழாவில் பேசிய விஜய், "நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள், கிராமப்புற ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நீட் தேர்வு குளறுபடியால் அதன் மீது இருந்த நம்பகத்தன்மை போய்விட்டது. அதற்கு நிரந்தர விலக்கு வேண்டும்" என்றார்.
அர்ஜுன் சம்பத்
விஜயின் கருத்துக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சனம் செய்துள்ளார்.
அவர் விஜய் குறித்து தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ஜோசப் விஜய் அரசியல் வெகு விரைவில் முடிவுக்கு வரும் என்று நினைக்க தோன்றுகிறது.
ஜோசப் விஜய் - அரசியல்
போன வாரம்- நெற்றியில் குங்குமம்
இந்த வாரம்-நெற்றியில் சுத்தம்
போன வாரம் - ஆன்மீக அரசியல்
இந்த வாரம் - திராவிட அரசியல்
போன வாரம் -போதைக்கு எதிர்ப்பு
இந்த வாரம் - நீட் க்கு எதிர்ப்பு
போன வாரம் - திமுக எதிர்ப்பு
இந்த வாரம் -பாஜக வுக்கு எதிர்ப்பு
போன வாரம் - கொள்கை இல்லை
இந்த வாரம் - கொள்கையை இல்லை
போன வாரம் -வேற வாய்
இந்த வாரம் - நாற வாய்
போன வாரம் - நடிகர் விஜய்
இந்த வாரம் -ஜோசப் விஜய்
ஜோசப் விஜய் ஒரு வாரத்தில் இவ்வளவு முரண்பாடுகள் ஏன் இந்த மாற்றம் பல செய்திகள் காதில் விழுகிறது. நான் போன வாரமே சொன்னேன். நீங்கள் அரசியல் கட்சி தொடங்கி விட்டீர்கள் இனி அரசியல் செய்ய வேண்டும்.
உங்கள் சித்தாந்தம் கொள்கை தெரிந்தால் உங்களை அரசியல் கட்சிகள் எதிர்க்க தொடங்கும். திமுகவும் இமகவும் உங்களை கடுமையாக எதிர்க்கும் அந்த அரசியலை எதிர்த்து நீங்கள் களத்தில் நிற்க முடியுமா என்று சொன்னேன்.
ஒரு வாரத்தில் ஜோசப் விஜயயின் நடவடிக்கைகளின் மாற்றங்கள் முரண்பாடுகள் பார்த்தால் வெகு விரைவில் ஜோசப் விஜயின் தவெக மூடு விழா நடைபெறும் என நினைக்கிறோம்.
நாங்க அரசியலில் எம் ஜி ஆர் அவர்களை பார்த்து விட்டோம் அம்மையார் ஜெயலலிதா அவர்களை பார்த்து விட்டோம்! நடிகர் திலகம் சிவாஜி கணேசனைபார்த்து விட்டோம்! நடிகர் டி. ராஜேந்தரை பார்த்து விட்டோம்! இயக்குனர் பாக்யராஜை பார்த்து விட்டோம்!
கேப்டன் விஜயகாந்தை பார்த்து விட்டோம்! உலகநாயகன் கமல்ஹாசனைபார்த்து விட்டோம்! இதோ தொடங்க போகிறேன் இப்போ தொடங்குகிறேன் என்று சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்து விட்டோம்!
இவ்வளவு பேரை பார்த்த எங்களுக்கு நீங்கள் லெல்லாம் சுண்டைக்காய். அரசியல் என்றால் விளையாட்டாக போச்சு! அதிலும் முதலமைச்சர் என்ற சொல் உங்களுக்கு எல்லாம் நகைச்சுவை இருக்கிறது.
அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வது அதற்கு போராட வேண்டும் சிறை செல்ல வேண்டும் வந்தவுடன் மக்கள் முதலமைச்சர் பதவியை தூக்கி கொடுக்க மாட்டாங்க.
இனி தமிழகத்தில் எந்த நடிகரும் அரசியலுக்கு வர வேண்டும் என்று எண்ணம் வரவே கூடாது. கமலஹாசனின் மக்கள் நீதி மையம் வரிசையில் ஜோசப் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாறப்போகிறது திமுகவின் ஊது குழலாக தமிழக வெற்றி கழகம் உருவாகிவிட்டது.
வெகுவிரைவில் திமுகவின் பிராண்ட் அம்பாசிடராக விஜய் மாறுவார். அப்பொழுதுதான் அவருடைய கோட் படம் ரிலீஸ் ஆகும். இல்லையென்றால் விஜய்க்கு பலவித நிர்பந்தங்களை திராவிட மாடல் அரசு ஏற்படுத்தும் இப்பொழுதே அத்தகைய நிர்பந்தங்களை ஏற்படுத்த துவங்கி விட்டார்கள்.
எனவே தான் ஜோசப் விஜயின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. ஜோசப் விஜய் நம்பி தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள ஜோசப் விஜய் ரசிகர்கள் ஏமாந்து விட வேண்டாம்!" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |