121 பேர் உயிரிழப்புக்கு சமூக விரோதிகளின் சதி தான் காரணம்.., போலே பாபா சாமியார் சர்ச்சை பேச்சு
உத்தரப் பிரதேச மாநிலம் ஆன்மீக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்ததற்கு சமூக விரோதிகளின் சதி தான் காரணம் என்று போலே பாபா சாமியார் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.
121 பேர் மரணம்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்கிற சாமியார் ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடினர். அப்போது, மத நிகழ்வு முடிந்ததும் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு 80 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக சுமார் 2.5 லட்சம் பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதித் துறை விசாரணைக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
சர்ச்சை கருத்து
இந்நிலையில், ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் சமூக விரோதிகளின் சதி தான் என்று போலே பாபா சாமியாரும், அவரது வழக்கறிஞரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக போலே பாபா தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறுகையில், "போலே பாபா சாமியார் தனது பக்தர்களை காலில் விழுந்து ஆசி பெறுவதற்கு அனுமதித்தது இல்லை.
இதனால், கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசல் சமூக விரோத சக்திகள் தீட்டிய சதி தான். இவை எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன.
இந்த ஆன்மீக நிகழ்ச்சியை முறையாக திட்டமிடாமல் உயிரிழப்பு ஏற்படுத்தியது சமூக விரோதிகள் சதி தான் என்று சாமியார் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |